ravan181

KOUNDINYAN70 · @ravan181

16th May 2013 from TwitLonger


எதோ என்னால் முடிஞ்சது ஏழைக்கேத்த எள்ளுருண்டை நானும் எழுதி இருக்கேன்

உறவுகள் மேம்பட .....

குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும், ஏற்பட்ட விரிசல்கள் மேலும் பெரிதாகாமல் இருக்க

1. நானே பெரியவன் நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்.

2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள்.

3. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள்.

4. சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என்று உணருங்கள்.

5. நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள். குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.

6. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள்.

7. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வப்படாதீர்கள்.

8. அளவுக்கதிகமாய், தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.

9. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.

10. கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

11. அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள்.

12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.

13. மற்றவர் கருத்துக்களில் செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்துக் கொள்ளாதீர்கள்.

14. மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும், இனிய இதமான சொற்களைப் பயன் படுத்தவும் தவறாதீர்கள்.

15. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்.

16. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.

17. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.

18. பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.

Reply · Report Post