முதலிலே ஒரு டிஸ்கி. தோட்டா இந்த நிகழ்வுக்கு கூப்ட்டப்பவே, வேணாம் மாம்ஸ் என இழுத்தேன். அங்க போய்ட்டா அப்புறம் ஓட்ட முடியாது என்பதால். கடைசியில் நம்ம மக்கள் திரண்டு வந்ததால் சரின்னு போயாச்சு. மேட்டர் என்னன்னா, எம்ஜிஆர் என நினைச்ச தோட்டா நம்பியார் ஆகி கடைசி நேரத்துல எஸ் ஆகிட்டாரு.

நீயா நானா ஒரு விவாத நிகழ்ச்சி என்றாலும் பொழுதுபோக்கு அம்சமும் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சிக்கு தேவையாயிருக்கு. அதனால எத எத போடணும், எடிட் பண்ணனும் என்பது அவர்கள் விருப்பம். அதை குறை சொல்ல போவதில்லை. ஆனா அன்னைக்கு நிகழ்ச்சி முடிந்ததும், இன்று நிகழ்ச்சிய பார்த்ததும் சில விஷயம் சொல்லணும்ன்னு தோணுது. எப்படி முயற்சி செய்தாலும் மீசையில் மண்ணு ஓட்டல ரேஞ்சுக்குத்தான் இந்த ட்வீட்லாங்கர் வருமென்பதால், கொஞ்சம் பொறுங்க. ஷேவ் பண்னிட்டு வந்து மிச்சத்த எழுதறேன்.

நீயா நானா நிகழ்ச்சிக்கு இரண்டு பிரச்சினைகள். 1) கெளதம சித்தார்தன் ஒரு சிற்றிதழில் அதை கிழிகிழியென கிழித்து விட்டார். 2) ட்விட்டரிலும், ப்லாகிலும் நீயா நானாவை ஓட்டுகிறார்கள். இரண்டையும் சமாளிக்க ஒரு எபிசோட் . இதான் ப்ளான். தலைப்பை முன்னாடியே சொல்லிவிட்டால் நம்ம ஆளுங்க ரெடி ஆயிடுவாங்க. தெரியலைனாலும் ராஜனுக்கும், கோளாறுக்கும் ஃபோன போட்டா ஆளுக்கு 4 பாயிண்ட் சொல்லி தந்துடுவாங்க. சோ, முதல் திட்டம் வழக்கமான தலைப்போ, இரண்டு பக்க விவாதமோ இல்லை. அங்க நிக்குறாரு ஆண்டனி. தலைப்பு : அறிவாளிகளை பற்றியது. தட்ஸ் ஆல்.

முதல் கேள்வி கேட்கிறார். அறிவாளியா வேஷம் போடுறது எந்தளவுக்கு இப்ப முக்கியமா இருக்கு? இத கேட்பதற்கு முன்னாடியே அது அவசியம் என கணம் கோட்டார் சொல்லிவிட்டார். எல்லொரும் அதையே பிடித்துக் கொள்ள, நான் வேற மாதிரி சொன்னேன். “competition அதிகம் என்றாலே அறிவாளிகள் அதிகம் என்றுதான் அர்த்தம். அதனால் அறிவாளியா வேஷம் மட்டும் போட்டா எட்டி உதைச்சிடுவாங்க. நம்மல அறிவாளிய ஆக்கிக் கொள்வதுதான் ஒரே வழி” என்றேன். ஏன் பாஸ் சீரியஸா பேசுறீங்க? ஜாலியா பேசுங்க என மைக்கை அடுத்த ஆளிடம் தந்துவிட்டார் கோபி. நாம சரியாதானே பேசுறோம்னு யோசிச்சிட்டே இருந்தேன். நிகழ்ச்சியின் கடைசில கோபியும் நான் சொன்னதையே சொன்னார். வேஷம் போட்டா மாட்டிக்குவோம் என்றார்.நாம சொன்னா asukon என்றா சொல்வார்கள்? எனக்கு #isnkk தான் ஞாபகம் வந்துச்சு. கோபி சொல்ல வேண்டியத நாம சொன்னா எப்படி டிவில போடுவாங்க???

அடுத்து attire பற்றிய பேச்சு. எப்படிலாம் அறிவாளிகள் attireல அந்த லுக் கொடுப்பாங்க என்றார். மைக் வேற நம்ம கைல இருந்துச்சு. “மாமா டவுசர் கழண்டுச்சுன்னு ரிங் டோன் வச்சிருப்பான் சார். ஆனா பாப் மார்லி டீஷர்ட் போட்டுக்குவாங்க.” உடனே கோபிக்கு பாப் மார்லி பற்றியும், அந்த டீஷர்ட் போடுபவர்கள் பற்றி நான் தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருக்கிறேன்னும் ஏதோ சொன்னார். அட கடவுளே!! நான் தாங்க பாப் மார்லி டீஷர்ட் போட்டிருக்கேன் என அனுமார் மாதிரி காட்டினேன். என்ன நினைச்சாரோ.. வேற வேறன்னு போய்ட்டார். நெஞ்சை தூக்கி காமிச்சதாலோ என்னவோ அதுவும் சென்சார்ட்.

முதல்ல் நிகழ்ச்சிய காமெடியா பன்ணலாம்னு சொன்னாரா? நம்ம @piliral முதலில் ஜாலியா பேசினத எடுத்துக்கிட்டாரு. அடுத்த தடவையும் காமெடி பண்ணா, “அந்த சீன் முடிஞ்சிடுச்சு. இப்ப சீரியஸ்”என கடுப்பச்சிட்டாரு. அவ்ளோதான். இனி என்ன பேச? வலைல விழுந்தாச்சு, இனி பேச பேச டேமேஜ்தான்னு ம்யூட் மோடுக்கு போயிட்டோம்.

அதே மாதிரி கெளதம சித்தார்தன் அவர்களுக்கும் கடைசில 30 நிமிஷம் தனியா மைக்க கொடுத்து, அவர பேச வச்சு, அவர் வாயாலே நீயா நானா நல்ல நிகழ்ச்சிதான்னு சொல்ல வச்சிட்டாங்க. கடைசியா நல்லா இருக்குன்னு சொன்னத மட்டும் கட் பண்ணி போட்டுடலாம் பாருங்க.

நீயா நானா எபப்டியெல்லாம் அறிவாளி வேடம் போடுதுன்னு ஒரு கேள்வி. இங்கதான் ஆண்டனி அறிவாளி என காமிச்சார். நடுவர்களையும், பங்கேற்பாளர்களையும் நக்கலடிச்சு சொன்ன எல்லாத்தையும் கோபி ஒத்துக்கிட்டார். நிகழ்ச்சியை கலாய்த்த எல்லாத்தையும் அழகா பேசி மறுத்துட்டார்.ஆனா ஒண்ணு நிகழ்ச்சிக்கு போய் பல்பு வாங்கியத மறுக்கல. ஒத்துக்கிறோம் :)).

வேடன் விரிச்ச வலைல மாட்டியாச்சு.. இனி பேசி பிரயோஜனமில்லை. முதலை மாதிரி இனிமேல ட்விட்டர்ல மட்டும் கிண்டலடிச்சிட்டு டின்னர் சாப்பிடுறதுதான் புத்திசாலித்தனம்.. well done neeya nana team. :)))


பிகு: ஆங்கிலத்தில் ROTFL(rolling on the floor laughing)மாதிரிதான் #asukon, #isnkk

asukon: arumaiyaga sonneergal. ungal karuthukal ovvondrum nethiyadi

isnkk: itha sonna nammala kena kirukkan

Reply · Report Post