சேது கால்வாய் பற்றி

பிராமணர் ஒருவர் ஆசிரியராக இருக்கும் வகுப்பில், மாணவர்கள் சிலர் அவரைக்கேள்விகள்கேட்டு; அவர் தனது மொழியில் பதில் அளிக்கும்

கேள்வி பதில்

மாணவன்: அய்யா ராமர் பாலம் என்றால் என்ன? சேது கால்வாய்த்திட்டத்துக்கு அது எப்படி இடைஞ்சலாகும்?

ஆசிரியர்: இது தெரியாதோ, மண்டு. சமுத்திரத்திலே திட்டு திட்டா மணல் மேடு உருவாகி அது ரொம்ப நீளத்துக்கு பாலம் போல இருக்குடா, மண்டு: அதைத்தான் ராமர் பாலம்னு பெரியவா சொல்றா. அந்த பாலம் இருந்தா சேதுக்கால்வாயிலே கப்பல் எப்படி போக முடியும்? அதனால்தான் அந்த மணலை எல்லாம் அகற்றி, அப்புறம் கப்பலை விடப்போறாளாம்.

மாணவன்: அப்படின்னா... ராமர் பாலத்தை இடிச்சே ஆகனுமா?

ஆசிரியர்: அப்படித்தான் - மத்திய சர்க்காரும், மாநில சர்க்காரும் பொறியாளர்களும் சொல்றாங்க.

மாணவன்: ஓ! அதாவது மணல் குவிஞ்சு வரிசையா திட்டுத்திட்டா நீளமா இருக்கு- அதைப் பார்க்க பாலம் மாதிரி இருக்கு.

ஆசிரியர்: ஸ்பஷ்டமா சொன்னேடா- அதான் ராமர் பாலம்- சாட்சாத் ராமபிரான் கட்டின பாலம்.

மாணவன்: ஏன் சார்? அந்த பாலத்திலே அடிக்கல் நாட்டுவிழா கல்லு- பாலத் திறப்பு விழா கல்லு எல்லாம் இப்பவும் இருக்குதா?... அதாவது: அனுமார் தலைமையிலே ராமன் திறந்து வச்ச பாலமா?

ஆசிரியர்: ஆமாம்- பதினேழு லட்சம் வருஷத்துக்கு முன்னாடி திறப்பு விழா நடந்த பாலம்! - முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த விழாவுக்கு வந்து மலர் மாரி பொழிந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

மாணவன்: நான் கேள்விப்பட்டேன் சார்; முப்பத்து முக்கோடி தேவர்களும் அந்த பாலத்திலே ஏறி நின்னு பூமாரி பொழிஞ்ச போது - அவ்வளவு ஜனக்கூட்டத்து கனம் தாங்காம அந்த பாலம் இடிஞ்சு விழுந்ததாமே? - ஏன் சார்; பால இடிஞ்சா பக்கத்திலே புதுப்பாலம் கட்டுறாங்களே; இப்ப கூட பாருங்க; நம்ம சென்னை அடையாறுல; ஒரு பழைய பாலத்தை; கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சரா இருந்தப்ப இடிச்சுட்டு புதுசா "திரு.வி.க.பாலம்'' என்று ஒரு பாலம் கட்டி இருக்காறே?

ஆசிரியர்: டேய்- குறும்பா! குதர்க்கமெல்லாம் பேசாதே- சேதுக்கால்வாய் தோண்டுறேன்- தமிழ்நாட்டை வாணிபத்திலே, பொருளாதாரத்திலே வளமாக்கிறேன்னு; வீண் கதை பேசிக்கிட்டு; ராமனோட சாபத்துக்கு ஆளாக போகுது ஒரு கூட்டம்!

மாணவன்: ஆசிரியர் அய்யா; அப்படின்னா சேது திட்டம் வராதுன்னு சொல்லுங்க!

ஆசிரியர்: வராதுன்னு சொல்லலேப்பா; வரக்கூடாதுன்னு சொல்றேன் சேலம் இரும்பாலைத்திட்டம்னா இவாளே கொண்டு வர்றா- நெய்வேலி 2-வது சுரங்கமும் இவா கோரிக்கையேதான்- தூத்துக்குடி உரத்தொழிற்சாலைக்கும் இவாளே உரிமை கொண்டாடுரா- வெளிநாட்டு முதலீடுகளுக்கும் இவாளே காரணம்கிரா- செம்மொழின்னா இவாதான்- இப்ப சேது கால்வாயும் சேந்துட்டா தலை கீழா நிப்பா! கையில பிடிக்க முடியாது... அதனாலதான் ராமர் பாலமோ- ராவணன் பாலமோ ஏதோ ஒன்னைச் சொல்லி தடுத்து நிறுத்தறது நம்மவா தர்மம்.

Karthik Tpr

Reply · Report Post