elavasam

elavasam · @elavasam

17th Oct 2013 from TwitLonger

மூஞ்சிபுக்கில் எழுதிய ஒரு பதிவு. @amas32 உங்களுக்காக இங்க! :)

இன்று கிரேசி மோகன் Crazy mohan பிறந்த நாள்.

அவரை வாழ்த்தி ஒரு வெண்பா எழுதி அனுப்பினேன். அது

வெண்பாப் புனைகின்ற வேந்தனே வாழ்கவே
பண்பாய் வசனம் பகர்வோனே வாழ்கவே
நன்றாய்ப் படம்வரையும் நல்லவனே வாழ்கவே
நன்பாவால் வாழ்த்திடுவேன் நான்!

Shanmuga Sundar Lakshmanan நேரம் கிடைக்கும் பொழுது கலி விருத்தம் எழுதுங்களேன் என கோத்து விட்டார். இந்த வெண்பாவை எழுதும் பொழுதே கடைசி அடியை மட்டும் கொஞ்சம் மாற்றினால் கலிவிருத்தமாகி விடுமே என தோன்றியதால் அப்படி மாற்றி ஒரு கலிவிருத்தம் எழுதினேன்.

வெண்பாப் புனைகின்ற வேந்தனே வாழ்கவே
பண்பாய் வசனம் பகர்வோனே வாழ்கவே
நன்றாய்ப் படம்வரையும் நல்லவனே வாழ்கவே
நன்பா வழிவாழ்த்து நண்பாநீ வாழ்கவே!

வெண்பா எழுதியாச்சு கலிவிருத்தம் எழுதியாச்சு, கடைசி வார்த்தைகள் எல்லாம் ஒண்ணா இருக்கப் போக அண்ணன் Naga Chokkanathan சொன்ன மாதிரி வெளிவிருத்தமும் எழுதிடலாமே எனத் தோன்ற

வெண்பா தருமென் வேந்தே என்றும் வாழ்வீரே
பண்பாய் வசனம் பகர நீங்கள் வாழ்வீரே
நன்றாய்ப் படங்கள் நயமாய் வரைய வாழ்வீரே
நன்பா எழுதி நானும் சொல்வேன் வாழ்வீரே!

என வெளிவிருத்தமும் ஆச்சு.

இப்படியாக வெண்பா, கலிவிருத்தம், வெளிவிருத்தம் என ஒரு முறைக்கு மூன்று முறை மந்தைவெளிக் கவிராயருக்கு வாழ்த்து சொல்லியாச்சு! ஆனா எத்தனை வழியில் சொன்னாலும் இப்படிச் சொன்னால்தானே சொன்ன மாதிரி இருக்கு - ஹேப்பி பர்த்டே தல!

Reply · Report Post