யாருக்கும் துணிவில்லை

சங்கர்ராமன் கொலை வழக்கில் எந்த ஒரு மாறுபட்ட கோணத்திலும் சிந்தித்து புதிய தீர்ப்புச் சொல்ல நான் முயல்வதாய் இல்லை.இவ்வழக்கின் விசாரணை குறித்தோ தீர்ப்பு குறித்தோ விமர்சனமும் வைப்பதாக இல்லை.இங்கே இவ்வழக்கில் காஞ்சி மடத்துக்கு தொடர்பு உண்டா இல்லை அவர்கள் நிரபராதிகளா எனவும் விவாதிக்கவில்லை அப்புறம் என்ன கூந்தலுக்கு இப்போ இந்த ட்வீட் லாங்கர் அப்பிடீன்னு நீங்க நினைக்க வேண்டாம்....

நேற்றைய புதிய தலைமுறை நேர்படப் பேசு நிகழ்ச்சியில் கொலையுண்ட சங்கர்ராமன் மகன் ஆனந்த் கலந்து கொண்டு சில கருத்துக்களை முன் வைத்தார் அதில் ஒன்று "எங்கப்பா அவரா குத்தி கொன்னுட்டு செத்துப்போயிட்டாரா?" இதற்கான பதில் நீதிமன்றத்தில் கிடையாது காவல்துறை தான் பதில் சொல்லவேண்டும்.மற்றொன்று "வழக்கின்போது எனக்கும் எனது அம்மாவுக்கும் பிறழ் சாட்சி அளிக்குமாறு மிரட்டல் வந்தது உயிர் பிழைத்திருக்கவே பிறழ் சாட்சி அளித்தோம்" என்பது. உடனே நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டது இத்தனை நாட்கள் இதை நீங்கள் ஏன் வெளியே சொல்லவில்லை என்று அதற்கான பதிலாக ஆனந்திடம் இருந்து கலவையான பதில்களே வந்தது சரியான உண்மையான பதில் வந்தது போல தெரியவில்லை நிற்க

இங்கே எனக்கான கேள்வி ஒரு வழக்கின் சாட்சி "உயிர்பிழைத்திருக்க நான் பிறழ் சாட்சியம் அளிக்குமாறு மிரட்டப்பட்டேன்" என தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் சொல்லுகிறார்.அதைக் கேட்டு மொத்த தமிழகமும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை ஒரு காவல்துறை உயரதிகாரியோ அல்லது இதுவரை அறியப்படாத கடவுளுக்கு நிகரான நீதிபதிகளில் ஒருவரோ அல்லது நீதித்துறை அதிகாரிகளோ பார்க்கவில்லையா ? இல்லை மறுநாள் செய்தித் தாள் படிக்கவில்லையா ?

ஆனந்திற்கு வந்த கொலை மிரட்டல் உண்மையா இல்லை நாடகமா என புலனாய்வு செய்து உண்மையெனில் மிரட்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் தவறெனில் ஆனந்தை தண்டிப்பதும் நீதிமன்றத்தின் கடமையில்லையா ?

ஒரு கொலை வழக்கின் சாட்சி தன் உயிர் பிழைப்பிற்காக பிறழ் சாட்சி அளித்தேன் எனக் கதறுவதை வெறுமனே வேடிக்கை பார்க்கும் நீதிமன்றங்கள் தேவையா நமக்கு ? நீதி தேவதை என்பவள் வெறுமனே நீதி வழங்க மட்டுமே படைக்கப்பட்டவள் மட்டும் அல்ல மறுக்கப்பட்ட நீதியை வழங்க உரிமை உள்ளவளும் தான்

சாட்சிகளை பாதுகாத்து அவர்களின் பயத்தைப் போக்க வேண்டிய நீதிமன்றங்கள் மவுனமாக இருப்பது இந்திய இறையாண்மைக்கு எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல

கடைசியாக.....

ஆலமரத்தில் அடியில் நசுங்கிப்போன சொம்பும் துவைக்காத ஜமுக்காளமும் வைத்து நடத்திய கிராமப் பஞ்சாயத்துகள் எவ்வளவோ மேல்.....





Reply · Report Post