தமிழ்க்கவி

புலிகளின் குரல் வானொலியில் பணிபுரிந்தவர். பாடகி, கேமிரா விமன், எடிட்டர், தயாரிப்பாளர், எழுத்தாளர். ஊடகத்தின் அத்தனை துறைகளிலும் அனுபவம் வாய்ந்தவர். தமிழ், ஆங்கிலம், சிங்களம் மூன்று மொழிகளையுமே சரளமாகப் பேசக்கூடியவர்.

ஈழத்தின் கடைசிக்கட்ட போர் அனுபவங்களை நாவலாக எழுதியிருக்கிறார். ‘ஊழிக்காலம்’, தமிழினி வெளியீடாக வெளிவந்திருக்கிறது. போரின் வலி நேரடி சாட்சியமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நாவலை எழுத எவருக்குமில்லாத தகுதி அன்னை தமிழ்க்கவிக்கு உண்டு. ஏனெனில் தன்னுடைய இரண்டு மகன்களை போரின் பசிக்கு உணவாக கொடுத்த அவலமான அனுபவம் அவருக்கு இருக்கிறது.

போரிலக்கியம் என்கிற வகையில் வகைப்படுத்தக்கூடிய இந்நாவல், தமிழின் மிக முக்கியமான ஆக்கங்களில் ஒன்றாக நிச்சயம் இடம்பெறப் போகிறது என்று நம்புகிறேன்.

Reply · Report Post