ஆறு மாத காத்திருப்புக்குப் பின் நேற்றுதான் த்ரிஷ்யம் படத்தைப் பார்த்தேன்.ஒட்டு மொத்தக் கேரள மக்களும் இப்படத்தைக் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியதற்கான காரணம் தெளிவாக விளங்கியது.சில படங்கள் தூக்கம் கெடுத்துவிடும்.திரிஷியமும் அப்படியொரு படமே.இப்படியொரு சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தை நான் இதுவரை எங்கும் கண்டிட்டில்லா.

லாலேட்டன்,மீனா தொடங்கி அவரரது இரண்டாவது மகளாக நடித்திருந்த அந்த குட்டிப்பெண் வரை அனைவரிடமும் அப்படியொரு யதார்த்தம் குறையாத கச்சிதமான நடிப்பு.இடைவேளைக்குப் பிறகான படத்தின் ஒவ்வொரு காட்சியும் அட்டகாசம்.பீட்சா படத்திற்குப் பிறகு,நான் அதிகம் வியந்தது இப்படத்தின் திரைக்கதையைத்தான்.

இப்படத்தின் கதை குறித்த சிறு தகவல் கூட,இனி படம் பார்க்கப் போகிறவரின் சுவாரசியம் கெடுத்துவிடும் என்பதால் அது குறித்து எதுவும் சொல்லப் போவதில்லை.ஆனால்,ஒன்று சொல்லலாம்,படத்தில் வரும் ஒவ்வொரு திருப்பமும் ஆச்சரியம் கூட்டும்.குறிப்பாக அந்த க்ளைமாக்ஸ் காட்சியும்,மோகன்லாலால் காக்கப்படும் அந்த ரகசிய முடிச்சு அவிழும் காட்சியும் உங்களையும் அறியாமல் உங்களை எழுந்து நின்று கைதட்ட வைக்கலாம்.A must watch movie.

கொசுறு:தன் குடும்பத்தினர் முன் பூட்ஸ் காலால் போலீசிடம் மிதி வாங்கிவிட்டு,அந்த வேதனையை மறைத்து தன் குடும்பத்தைப் பார்த்து லேசாக சிரிப்பாரே.... ப்பாஆஆஆ..சும்மாவா சொன்னாய்ங்க..The complete actor'ன்னு . லால் சார்..தயவுசெஞ்சு எவன் கூப்ட்டாலும் இனி தமிழ்ப்படத்துல எல்லாம் தாதா வேஷம் கட்டாதீங்க....நீங்க வேற சார். :)

Reply · Report Post