பேசவேண்டாம் என்று சொல்லிவிட்டேன்
இரவு ஒரு கொடுங்கனவு வந்தது
காலை ஒரு சிறுகவிதை உதித்தது
பேருந்தில் உன்சிரிப்பை ஒத்த
கைக்குழந்தை என்னிடம் தாவிற்று
இறங்கும்போது கால் இடறி
பெருவிரல் நகம் பெயர்ந்தது

நீ பரிசளித்த ரோஜாச்செடி
உன் கோபத்தின் நிறத்தில் பூத்திருக்கிறது
தொட்டிமீன் ஒன்று செத்துப்போயிற்று
பூ மிதித்த பக்கத்துவீட்டு அக்காவின்
காலெல்லாம் கொப்புளங்கள்
எல்லாமும் சொல்லவேண்டும்..பேசிவிடு.

குறுஞ்செய்தி ஒன்றனுப்பி கொள்வதோ
பேசாமலே விடுத்து கொல்வதோ
சட்டென முடிவு செய்.
நேரம் கூடக்கூட
நிறைய காதல் கேட்பேன்.



Reply · Report Post