கத்தி


கத்தியை ரெண்டு நாளா பபிள்கம் மாதிரி மென்ணுட்டு இருக்கேன். மொத்தமா எழுதாம சில பாயிண்ட்ஸ் மட்டும் எழுதலாம்னு தோணுச்சு

1) பத்ரி சேஷாத்ரி படம் பாக்காம அந்த பிரஸ் மீட் பேச்ச மட்டும் விமர்சிச்சு எழுதி இருந்தாரு. அதாவது நீர்நிலைகள் காணாம போனதுக்கும் கார்ப்பரேட்டுக்கும் ஸ்நானபிராப்தி இல்லை. அது அரசு & மக்களின் அலட்சியம்னு எழுதி இருந்தாரு. கத்தியில் நான் ரசிச்ச விஷயமே நேரிடையா மக்களை(நகர்ப்புற) குற்றம் சொன்னது.வழக்கமா இந்த மாதிரியான சமூக பிரச்சினைகளை பேசுற படங்கள் எல்லாத்துக்கும் காரணம்னு யாராவது அரசியல்வாதிகள்/அதிகாரிகள்னு தள்ளி விட்டுட்டுவாங்க. ஆனா இதுல பிரஸ்மீட்டோட நோக்கமே நகர்ப்புறவாசிகளுக்கு புரிய வைப்பதுதான். அதாவது நேரிடையா அவங்கள நோக்கி குறை சொல்றது. கார்ப்பரேட் அந்த கிராமத்துக்கு எதிரி. ஆனா கதிரேசன் பேசுற தன்ணி பத்தின பேச்சுல கார்ப்பரேட், அரசியல்வாதிகள்(2ஜி), மக்கள்னு எல்லோரையும் சொல்லி இருப்பாரு.. இது ஒருதைரியமான move. சிட்டி மக்கள் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தோணுச்சு.

2) ஷங்கர் டைப் படம்ன்றதால சில ஒப்பீடு தோணுச்சு. இது அவசியமில்லைதான். ஷங்கர் படத்துல ஸ்க்ரிப்ட் பக்காவா இருக்கும். ஒரு சீன் கூட இருந்துட்டு போகட்டும்னு விட மாட்டாரு.. ஃபர்ஸ்ட் பால் டிரயல்ஸ், முதல் வாய் சாமிக்குன்ற மாதிரி முருகதாஸ் மொத 30 நிமிஷம் ஏனோ தானோன்னு எடுத்திருக்காரு. அதே மாதிரி, ஒரு ஐடியா செமன்னு நிமிர்ந்தா, அடுத்த sequence ரொம்ப சுமாரா வைக்கிறாரு. கன்சிஸ்டென்சி ஷங்கரின் பலம்.
க்ளைமேக்ஸ் காட்சில கதிரேசன் foregroundல இருக்க, backgroundல ஜீவா குடும்பம் நிக்கும். அதுல ஜீவா மட்டும் மரத்து பின்னாடி மறையுற மாதிரி ஷாட் வச்சிருக்காங்க. டபுள் ஆக்‌ஷன் படத்துல இப்படிலாமா பண்றது? வாணி ராணி மாதிரி.. இந்தியன்ல ஒரு பாட்டுல ரெண்டு கமல் க்ராஸ் பண்ணுவாங்க. அப்ப பின்னாடி ஒரு அல்மாரி கண்ணாடில தெரிவாங்க. இதெல்லாம்தான் ஷங்கரின் சக்ஸஸ்னு தோணுது. முருகதாஸ் என்னான்னா, க்ளைமேக்ஸ் காட்சிலயே ஏமாத்த பாக்குறாரு. As a film maker, I admire shankar more than ARM

3) விஜயின் பெரிய பலம் பாடி லேங்குவேஜ்னு அடிக்கடி சொல்வேன். திருப்பாச்சி மாதிரி ஒரு படம் பண்ணிட்டு அதே கெட்டப்ல, சச்சின் பண்ண முடியும் அவரால. பெரிய நடிகன்னு சொல்ல வரல. ஆனா நலல் டைரக்டர் கிடைச்சா பிண்ணுவார்ன்னு குருவி காலத்துல இருந்து ப்ளாகுல கத்திட்டு வர்றேன். நண்பன், துப்பாக்கி, கத்தி அது உண்மைன்னு சொல்லுது. இப்பதான் ஜில்லா பண்ணாரு. காமெடி பண்ரேன்னு ஒரு மாதிரி கேணைத்தனமா மாடுலேஷன்லாம்.. சகிக்கல.. ஆனா ஜீவானந்தமா விஜய் கலக்கி இருக்காரு. 37 வயசு ஆள். எப்பவும் பொறுமையாவே பேசுறவர், நடக்கிறவர், கண்ணு துடிக்கும், இடது கைக்காரர்ன்னு மொத மொதலா ஒரு கதாபாத்திரத்துக்கு டைமென்ஷன் கொடுத்து அத கடைசி வரைக்கும் சொதப்பாம நடிச்சிருக்கார். விஜயின் ALL TIME BEST ஜீவாதான்...(இதுவரை)

4) கோக் விளம்பரம் நடிச்சவரு இத சொல்லலாமா??? கரெக்ட்டான கேள்வி.. சப்போர்ட் பண்ண சொல்லல. இந்த லாஜிக் புடிச்சா உலகத்துல எவனும் எதையும் கேட்க முடியாது.

5) முருகதாஸ் வந்தது பிடிக்கவே இல்லை. வரக்கூடாதுன்னு சொல்லல. எந்த சீன்ல வர்றாரு? சிட்டில இருக்கிறவங்க தண்ணிக்காக கஷ்டப்படுறத காட்ற சீன். press meet சீன்க்கு lead. இந்த நேரத்துல இவர் வந்து இங்க்லீஷ் பேசி, ஆடியன்ஸ சிரிக்க வச்சு, மொத்த sequenceக்கும் ஆப்படிச்சிருக்காரு, ஸ்க்ரிப்ட் நம்புற யாராவது இந்த வேலையை செய்வாங்களா?

6)பக்கம் வந்து தவிர வேற எந்த பாட்டோடவிஷுவல்ஸூம் பிடிக்கல. ஆனா பக்கம் வந்து விஜயின் recent best..

7) லாஜிக் பத்தியெல்லாம் கவலைப்படாம இருக்கிறது என்னைக்காச்சும் கவுத்து போட்டு ஆப்படிக்கும்.. கத்தி தப்பிச்சிடுச்சு

அப்பாலிக்கா மீதிய எழுதுவோம்.அதான் பட்ம ஓட போகுதே :))

Reply · Report Post