கத்தி - இப்போதைய தமிழ் சினிமா சூழல்ல இதெல்லாம் ஒரு சப்ஜெக்டான்னு தூக்கி எறிய வேண்டிய எல்லா தகுதியும் இருக்குற ஒரு கதையை எடுத்துக்கிட்டு விவசாயம் ,விவசாயிகள் பிரச்சினையை ரொம்பப் பெருசா பேசிருக்க முதல் முழுநீள தமிழ்ப்படம்.ஆமா இப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கு.
நம்ம ஊர் நிலத்தடி நீரை கிட்டத்தட்ட ரவுண்டு நம்பர் ஆக்கிட்ட கார்ப்பரேட் கோலா கம்பெனிகள்,அதன் ஆக்டோபஸ் கரங்களின் அசுர வலிமை,விவசாயிகள் தற்கொலை,மீத்தேன் வாயு ப்ராஜெக்ட்,விவசாய அழிப்பு, தேசத்தோட எல்லாப் பிரச்சனைகள்லேயும் நியூஸ் வேல்யூ தேடுற மீடியாக்களோட மெத்தனம்ன்னு படம் எல்லாம் விஷத்தையும் நேரடியாவே பேசியிருக்கு இல்லல்ல பொரட்டி எடுத்துருக்கு.வசனங்கள் எல்லாம் படத்தோட டைட்டில் மாதிரியே அவ்வளோ ஷார்ப்!
50 பேரை அடிச்சு லாரியில அள்ளிப்போட்டு அனுப்புற கதிரேசனா தெறிக்க விடுற அதே சமயத்துல தன்னோட கிராம மக்கள் ஏமாற்றப்பட்டது தெரிஞ்சு உடைஞ்சு போய் அழற ஜீவானந்தமா விஜய் செம்ம க்ளாஸ்.
படத்தை இன்னொரு தடவை பாக்க சமந்தா,Blueprint Scenes,சதீஸ் டைமிங் காமெடி,அனிருத் BGM, Coin Fight'ன்னு நெறைய விஷயம் இருக்கு.மொத்தத்துல..Worth watch.
கொசுறு: கம்யூனிசத்துக்கு விஜய் சொல்ற அந்த ஒரு வரி விளக்கத்தையும்,Engagement'க்கு சமந்தா குடுக்குற விளக்கத்தையும் ஒரு 6x6 கிரானைட் கல்லுல எழுதி வெச்சிட்டு அதுக்கு மேல ஏறி படுத்துக்கலாம். :)

Reply · Report Post