கத்தி


கத்தி படத்தை அலசி காயப்போடுறதோ, தண்ணில அமுக்கி லாஜிக் ஓட்டையை கண்டுபிடிக்கிறதோ,டைரக்டரிடம் சில கேள்விகள் கேட்கிறதோ, திரைக்கதை கிளாஸ் எடுக்கிறதோ இந்த டிவிட்லாங்கரின் நோக்கமில்லை, கத்தி படம் பார்த்ததும் சில விஷயங்கள் பகிர்ந்துக்கணும்னு தோணுச்சு..

படம் பாக்குறதுக்கு முன் கண்ணில் பட்ட டிவிட்களை வச்சு நானும் இப்படி ஒரு டிவிட் போட்டிருக்கேன் https://twitter.com/jroldmonk/status/524856805621383168 கேலி கிண்டல்கள்லாம் ஒருபக்கம் அதையும் தாண்டி மனசாட்சினு ஒன்னு இருக்கு மனசுல பட்டதை சொல்ல சொல்லி அது அழுத்துது.

ஒரு ஹிட்டு தான் வேணும்னா விஜய் ஒரு ரீமேக் பண்ணிட்டு போய்ட்டே இருக்கலாம். முருகதாஸுக்கும் எடுக்கிறதுக்கு எவ்வளவோ கதைகள் இருக்கு, இருந்தும் மக்கள் பிரச்சனையை பேசிருக்கார்னா சமூகத்தின் மேல் கொஞ்சமாவது அக்கறை இருக்குன்னு தான் அர்த்தம் அதனால தான் இப்படி ஒரு படம் எடுக்க முடிஞ்சிருக்கு.படத்துல ஒரு பிரஸ்மீட் காட்சி வருது அதான் அவங்க சொல்ல வர்ற மொத்த விஷயமும், பாட்டு ஃபைட்டு காமடி செண்டிமெண்ட்லாம் மக்களை தியேட்டருக்கு வர வைக்க செய்த ஜோடனைகளே.
நல்லவேளை விஜய் மாதிரி பெரிய ஹீரோ,டபுள் ஆக்ட்னெல்லாம் வச்சு இந்த படத்தை கமர்சியலா எடுத்திருக்கார் கதைக்கு பொருத்தமான நடிகர்கள் வச்சு சீரியஸா எடுக்கிறேன்னு எடுத்திருந்தா படம் தியேட்டர்ல ஓடிருக்காது டிவிலயும் போட மாட்டாங்க நல்ல பிரிண்ட்ல DVD வர கூட ரெண்டு வருஷம் ஆகும் அதான் நம்மூர் நிலைமை.சமரசங்கள் செய்துக்கிட்டாலும் ஒரு சமூக பிரச்சனையை அழுத்தமா சினிமாவின் வாயிலா பதிவு செஞ்சதுக்கு முருகதாஸுக்கு ஒரு ரெட் சல்யூட்.

குறிப்பா விஜய், அவருக்கு ஒவ்வொரு படத்துக்கும் ஏதோ ஒரு ரூபத்துல பிரச்சனை தொடர்ந்துட்டே வருது,இந்த நிலையில நமக்கேன் வம்புனு ரொமாண்டிக்,காமடினு பண்ணிட்டு போகாம இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க ஒத்துக்கிட்டதே ஆச்சர்யம் தான்.வேறு எந்த பெரிய நடிகர்களா இருந்தாலும் கண்டிப்பா நடிக்க தயங்குற சப்ஜெக்ட், அதுவும் பிரஸ்மீட்ல பேசுற வசனங்கள் பட்டவர்த்தனமா பல உண்மைகளை போட்டு உடைக்கிறதெல்லாம் சர்வ நிச்சயமா வேற எந்த ஹீரோவும் செஞ்சிருக்க வாய்ப்பேயில்லை.இது ஒரு நல்ல தொடக்கம் இவரை பார்த்து மற்ற நடிகர்களும் இதை தொடர வாய்ப்பிருக்கு,
விஜய்க்கும் ஒரு ரெட் சல்யூட்.

பணம் வாங்கிட்டு தானே படம் எடுக்கிறாங்க பேர் புகழ் தான நடிகர்களின் உள்நோக்கம் மேலும் இந்த படத்தை சுற்றி நடக்கும் போராட்டங்கள் இன்னும் என்னனென்னவோ குற்றம் சுமத்தலாம் "யார் சொல்றான்னு பாக்காத சொல்றது நல்ல விஷயமா இருந்தா பாலோ பண்ணிட்டு போய்ட்டே இரு"னு MRராதாவே சொல்லிருக்காராம், நியாமான பேச்சு. இந்த படத்துல இருக்கிற நேர்மையை நாம மதிக்கணும். இதுவரை வந்த படத்துலலாம் சூசகமா தான் மக்கள் பிரச்சனைகள் பத்தி பேசுவாங்க, இவங்களே கூட மேலோட்டமான வசனங்களை வச்சிட்டு போயிருக்கலாம். அப்பவும் கைதட்டல் கிடைக்க தான் போகுது படம் ஓடத்தான் போகுது அப்படி செய்யாம நேரடியா விவசாயிகளின் நீராதார பிரச்சனை கார்பரேட்களால் ஊறிஞ்சி அழிக்கிப்படுற நம் ஆறுகள்னு வெளிப்டையா பேசிருக்காங்க குறிப்பா மீத்தேன் பத்திலாம் பேசுனதை என்னால சில நிமிடங்கள் நம்பவே முடியலை.இவையெல்லாம் உண்மையாவே செய்திதாள்கள்ல நாலாம் பக்கத்துல ஏழு வரில போயிடுற விஷயங்கள் அதை பல கோடி பேர்களுக்கு கொண்டு போயிருக்காங்க. எங்கயோ இருக்கிற முருகதாஸுக்கும் விஜய்க்கும் எங்க மாவட்ட பேர் வரை குறிப்பிட்டு சொல்லி பிரச்சனையை அழுத்தமா பதிவு செய்யணும்னு எந்த அவசியமுமில்லை இருந்தாலும் எடுத்துக்கிட்ட கதைக்கு நியாயம் செஞ்சிருக்காங்களேனு நினைச்சு படம் பாக்கும்போது உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிடுச்சு அந்த நல்ல மனங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் அன்பும் _/\_

Reply · Report Post