இது interstellar படம் குறித்த சினிமா விமர்சனம் அல்ல, நான் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது பின் சீட்டில் படம் பார்த்துக்கொண்டிருந்த சிலர் பேசிக்கொண்டார்கள்..
இவ்வளவு அமைதியா படம் பாக்குறீங்களே புரிஞ்சுதான் பாக்குறீங்களா?

இல்ல, எதாச்சும் புரியுமான்னு பாக்குறோம்.

என்னப்பா ,விண்வெளிக்கு போனாங்க, வண்டி எதுக்குள்ளயோ போச்சு. திடீர்னு வேகமா போச்சு. ஏதோ கிரகத்துக்கு போயிட்டாங்க, அந்த வண்டிய பாத்தா இம்புட்டு தூரம் போற அளவுக்கு பெட்ரோல் போடுற மாதிரி தெரியலியே…

அவர்களின் விஞ்ஞான அறிவு அவ்வளவுதான்.நீங்கள் ஹாலிவுட் பிரியர்களாகவே இருந்தாலும் சில அடிப்படை இயற்பியல் அறியாவிட்டால் படம் படு குப்பை என்று தான் விமர்சிப்பீர்கள்.

ஒரு கதாநாயகன் கையில் கத்தியை எடுத்தால் கூட ,இந்த கத்தி இவ்வளவு எடை இருக்கும்,இதை இவ்வளவு எளிதில் அப்படி எடுத்து இப்படி குத்தி கொலை செய்ய முடியாதே என்று விமர்சித்துப் பழகியவர்களுக்கு இந்தப் படத்தில் கேட்க்க லட்சம் கேள்விகள் இருக்கும்.

சரி அந்த ரசிகர்களின் கேள்விக்கு வருவோம். ஏதோ பல ஆயிரம் ஒளியாண்டு பயணிக்கிறாங்களாம்,அந்த வண்டில எப்படி அவ்ளோ தூரம் பயணிக்க முடியும்??
ஒளியாண்டா ?? அப்படினா .

ஒளியின் வேகம் மணிக்கு 300000 கிலோ மீட்டர்கள்,இதே வேகத்தில் தொடர்ந்து ஒரு ஆண்டு பயணித்தால் அவ்வளவு தொலைவைக் கடக்குமோ அதுதான் ஒரு ஒளி ஆண்டு.
என்னயா நீ பத்தாவது பாட புத்தகத்துல உள்ளதைலாம் சொல்லிகிட்டு இருக்கன்னு கேக்கலாம்,பத்தாவது பாட புத்தகத்த புரிஞ்சு படிச்சா பாதி விஞ்ஞானி ஆகிடலாம் பாஸ்.

சரி இத்தனை வேகமாக நம்மால் பயணிக்க முடியுமா? அப்படி பயணிக்கிறதால என்ன பயன்.இதுக்கும் காலத்திற்கும் என்ன சம்மந்தம்.??

ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொன்றிற்கும் ஒரு சுற்றுவட்டப் பாதை உண்டு,ஒரு செயற்கைக்கோள் பல ஆண்டுகளாக பூமியில் மேல் சுற்றிக் கொண்டிருக்கிறது.அதற்கு ஏது எரிபொருள்??

ராக்கெட்டின் வேலை அதுதான், அந்த சுற்றுவட்டப் பாதையில் அந்த செயற்கைக் கோளை விட்டுவிட்டு கீழே விழுந்துவிடும். அந்த சுற்றுவட்டப்பாதையில் அது சுற்றும் மேகமானது அதன் எடையையும்,பூமியின் ஈர்ப்பு விசையையும் பொருத்து மாறும்.அந்த செயற்கைக் கோளின் எடை அதிகமாகவும்,ஈர்ப்பு விசை குறைவாகவும் இருந்தால் அதன் சுழற்சி வேகம் குறைவாக இருக்கும்,செயற்கைக் கோளின் எடை குறைவாகவும் ஈர்ப்பு விசை அதிகமாகவும் இருந்தால் சுழற்சி வேகம் அதிகமாய் இருக்கும்

சரி இந்த செயற்கைக்கோள் சுத்துறதுக்கும், காலப் பயணத்துக்கும் என்ன சம்மந்தம்?

உங்களுக்கு காலப் பயணம் செய்ய ஆசையா?
ஆமா சார், ஆனா அதுக்கு பூமியை விட்டு ரொம்ப தூரம் போகனுமாமே,அது எப்படி சார் முடியும்??

பூமியில் இருந்துகொண்டே காலப் பயணம் செய்யலாம்,அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான், குறைந்தது ஒளியின் வேகத்தில் செல்லக் கூடிய ஒரு விமானத்தை உருவாக்க வேண்டும், அதாவது விநாடிக்கு 300000 கிலோ மீட்டர்கள் வேகத்தில் பயணிக்க வேண்டும்.

சரி செய்துவிட்டோம் பிறகு என்ன செய்வது? நீங்கள் எத்தனை வருடம் கழித்த பூமியை பார்க்க ஆசைப்படுகிறீர்கள் , சரி பத்து வருடம் கழித்து இந்த பூமி எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க ஆசை, நல்லது அப்படியானால் நீங்கள் அந்த விமானத்தில் 5 ஆண்டுகள் பயணிக்க வேண்டும். அதாவது அந்த விமானம்
ஒளியில் வேகத்தை அடைவதில் இருந்து உங்கள் கடிகாரத்தின் நேரத்தை குறித்துக்கொண்டு அதன்படி 5 ஆண்டுகள் பயணித்துவிட்டு அந்த விமானத்தை தரையிறக்குங்கள்.

நீங்கள் 2014ம் வருடம் நவம்பர் மாதம் பயணத்தை தொடங்கினீர்கள், உங்கள் கடிகார கணக்குப்படி 5 ஆண்டுகள் கழித்து 2019 ம் வருடம் தரையிறங்குவீர்கள் , அப்போது பூமியில் 2024 நவம்பர் பாதம் நடந்துகொண்டிருக்கும், உங்களுக்கும் எனக்கும் 25 வது எனக்கொண்டால், நீங்கள் பயணம் முடித்து வரும்போது 30 வயதில் இருப்பீர்கள், எனக்கு 35 வயது ஆகியிருக்கும்.

இந்த கால அளவு நீங்கள் செல்லும் வேகத்தின் அளவைப் பொருத்து மாறும்.அதாவது ஒளியை விட இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்தால் 2019 ல் நீங்கள் தரையிறங்கும்போது இங்கு 2034 நடக்கும்.

அவ்வளவு வேகத்தில் பயணிக்க முடியாது,அந்த அளவுக்கு எரிபொருள் , வேகம்,கொண்டதை உருவாக்க முடியாது,வேறு வழி இருக்கிறதா?ஆம் உண்டு.

விண்வெளியில் ஒரு ப்ளாக் ஹோலை கண்டுபிடிக்க வேண்டும், அதென்ன ப்ளாக் ஹோல்? ஆயுள் முடிந்த ஒரு நட்சத்திரம் தான் ப்ளாக் ஹோல்,அதன் ஈர்ப்பு விசை நம் ஈர்ப்பு விசையினும் பல லட்சம் மடங்கு இருக்கும். சரி அதனால என்ன பயன்?

ஏற்கனவே சொன்னதுதான், ஈர்ப்பு விசை கொண்ட ஒவ்வொன்றுக்கும் ஒரு சுற்றுவட்டப்பாதை இருக்கும் என்று. இங்கிருந்து ப்ளாக் ஹோலின் சுற்றுப்பாதை வரை சென்றுவிட்டு அதன் சுற்றுவட்டப் பாதையை அடந்துவிட்டால் போதும், சிறிது நேரத்தில் அது ஒளியின் வேகத்தில் அந்த ப்ளாக் ஹோலை சுற்றிவரத் தொடங்கும்,இதற்கு எரிபொருள் தேவைப்படாதல்லவா, பூமியை ஒரு செயற்கைக்கோள் சுற்றுவதைப் போன்றுதான், உங்கள் காலக் கணக்கில் சில ஆண்டுகள் அதைச் சுற்றிவிட்டு அதன் சுற்றுவட்டப் பாதையில் இருந்து வெளியேறி பூமி திரும்பினால், அந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தான்.

இந்த காலப் பயணம் மட்டும் புரிந்துவிட்டால் படம் 90 சதவிகிதம் புரிந்துவிடும், மீதமுள்ள 10 % ஐந்தாம் பரிமானம் பற்றியது, ரைட்டர் தன்னோட விமர்சனத்துல அதை பற்றி சொல்லிருக்காரு.

இது காலப் பயணம் குறித்தது மட்டும் தான் , படத்தின் மொத்த விமர்சனத்தை http://www.writercsk.com/2014/11/interstellar.html இதில் படித்துக்கொள்ளவும்.

ரைட்டர் சொன்ன மாதிரி must must must watch

Reply · Report Post