முதல் ட்விட் லாங்கர் - எனக்கு தமிழ் மேல அளவு கடந்த பற்று வர காரணம்.......


கொஞ்சம் பெரிய பதிவு தான். பொறுமையா படிங்க.

அப்ப நான் 11வது படிச்சிட்டு இருந்தேன். பாய்ஸ் ஸ்கூல் தான் (சோக ஸ்மைலி). பொறந்ததுமே நர்ஸை பாத்த பார்வையில இவனை கோ-எட் ஸ்கூல் பக்கமே போக விடக்கூடாதுனு குடும்பத்தோட சத்தியம் பண்ணிருப்பானுக போல.

சரி அதை விடுங்க. எங்க ஸ்கூல் கீழக்கரையில உள்ள ஒரு முஸ்லிம் ட்ரஸ்ட் ஸ்கூல். படிப்புல ஆவரேஜ் தான். ஸ்கூல் வாத்தியார்ஸ் எல்லாரும் தாடி வச்சு ஓவர் ஸ்ட்ரிக்டா இருப்பாங்க.

அப்ப தான் முதன்முறையா திங்கட்கிழமை ஒரு ரம்மியமான காலையில வேற ஒரு ஸ்கூல் ப்ரண்டுட இருந்து ஒரு சீன் புக்கு கையில கெடச்சது. ராத்திரி 2 மணிக்கு அலாரம் வச்சு நாலஞ்சு தடவை ரிவிஷன் பண்ணி மனப்பாடம் பண்ணி படிச்சி முடிச்சுட்டேன்.

நான் படிச்சு தெரிஞ்சுட்டா போதுமா என்னோட ஆருயிர் நண்பர்களும் தெரிய வேண்டாமானு ஒரு நல்ல எண்ணத்துல ஸ்கூல்க்கு கொண்டு போய் ப்ரண்ட்ஸ்ட கொடுத்தேன். சின்ன வயசுல இருந்தே வெறும் பசங்க மூஞ்சியை மட்டும் பாத்த காரணத்தாலயே என்னவோ காஞ்ச மாடு கம்புல பாஞ்ச மாதிரி அந்த காவியத்தை பிச்சு தனித்தனியா ஆக்கிட்டானுக.

அதை கரெக்டா பக்கம் பக்கமா அடுக்குறதுக்குள்ள 2 பீரியட் ஆச்சுனா பாத்துக்கோங்களேன். கடைசியா சரி பண்ணி ஒரு மூதேவி ப்ரண்டு வீட்டுல போய் பாத்ரும்ல படிக்க(?) கேட்டதால கொடுத்துட்டேன்.

அடுத்த நாள் எங்க ஊரு பசங்க கடற்கரைக்கு கூப்டதால ஸ்கூல் கட் அடிச்சிட்டு போயிட்டேன். அங்க சந்தோசமா இருந்தது எவன் கண்ணு பட்டுச்சோ தெரில. சாயங்காலம் ஒருத்தன் போன் பண்ணி சொல்றான் உன் பிட்டு புக் ஸ்கூல்ல மாட்டிருச்சு. எல்லாரும் உன்னை சொல்லிட்டானுக. எல்லா வாத்திங்களும் உன்னை வலை வீசி தேடிட்டு இருக்காங்கன்னு. எனக்கு செம்ம பயம். நைட்டு சாப்பாடே இறங்கலை. மத்த மேட்டர்லாம் பரவாயில்ல, கெத்தா போஸ் கொடுக்கலாம். அதுவும் எங்க ஸ்கூல்ல அதிகமா பேரன்ட்ஸ் கூட்டி வந்ததும் நானா தான் இருப்பேன். இதுக்கும் வீட்டுல ஆளை கூட்டி வர சொன்னா எப்படி மூஞ்சில முழிக்கிறதுன்னு பயம். சரி நடக்கிறது நடக்கட்டும்னு மனசை தேத்தி போனேன்.

அங்க போனா கூட இருக்குற நாய்ங்க பயத்தை ஓவரா கெளப்பி விட்டானுக. 2வது பீரியட்ல ஒரு எடுபடி என்னை கூப்ட வந்தான். பக்கத்து க்ளாஸ்ல விசாரணை. குருதிபுணல் கமல் மாதிரி நம்மள ஆக்கிருவானுகனு முன்கூட்டியே ரெண்டு ஜட்டி போட்டு போனேன்.

அங்க 2 வாத்திங்க 1008 கேள்வி, தும்பை பூவுல தூக்கு போட்டு சாகுற மாதிரி கேட்டானுக. சரி கேளுங்கடானு விட்டுட்டேன். கடைசியா வீட்டுல இருந்து ஆளை கூட்டி வர சொல்லிட்டானுக. எனக்கு அள்ளு விட்டுருச்சு. அப்பத்தான் தேவதூதர் மாதிரி எங்க தமிழ் ஐயா வந்தாரு.

ஐயயோ இவரு வேற வந்து இடையில சொரிஞ்சு விடுவாரேனு கடுப்புல இருந்தேன். ஆனா வந்ததும் நீ தானாடா அது, இப்பலாம் சிடி, டிவிடினு வந்துருச்சே இன்னுமாடா இன்னும் இந்த இத்துப்போன புக்கை படிக்கிறீங்கன்னு கேட்டாரு.

அவரே அங்க இருந்த வாத்திங்கட்ட, விடுங்க சார் நாமலாம் ப்ராக்டிகலா பாத்தாச்சு, பசங்க இப்ப தானே தியரியை படிக்கிறாய்ங்கன்னு அவருக்கு அட்வைஸ் பண்ணி என்னை காப்பாத்துனாரு.

அன்னைல இருந்து தான் எனக்கு தமிழ் மேல அவ்ளோ பற்று வந்துச்சு. எங்க ஸ்கூல்லயை அதிகமா தமிழ்ல 183 மார்க் எடுத்தது நான் தான். இதுக்கு காரணம் எங்க “தமிழ் ஐயா சிராஜுதீன்” தான் என்று சொன்னால் மிகையாகாது.!!

Reply · Report Post