addiyaan

α doη · @addiyaan

26th Apr 2015 from TwitLonger

மீனம்மா என்னம்மா இப்படி பண்றேங்களம்மா


மீனம்மா என்னம்மா இப்படி பண்றேங்களம்மா

முதலில் நீங்கள் எழுதிய கருத்துக்கள் எதுவும் அறிவுரை சொன்னதாக தெரியவில்லை மாறாக நல்ல பெண்களையும் அறிவுரை என்ற பெயரில் திசை மாற்றி விட்டு தவறான வழியில் போக வைப்பதாகவே தெரிகிறது. நீங்கள் எழுதியதில் சில உண்மைகள் இருக்கலாம் ஆனால் நீங்கள் எழுதியதில் இருந்து நீங்கள் சொல்ல வரும் கருத்து பெண்களை ஆண்களிடம் இருந்து காப்பதாக தெரியவில்லை அவர்களுக்கு சுய இன்பத்தை கறபிப்பதாகவே தெரிகிறது.


1. "25 வயசு பொண்ணுகிட்ட காதலை சொல்வதற்கு ஆணுக்கு எந்த முகாந்திரமும் இல்லை... காதல் மனசு என்று யோசித்த காலம் எல்லாமே பள்ளி ப்ராயத்தொடு முடிந்து விடும்"

இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தகவல் பள்ளி பிராயத்தில் வரும் காதல் தான் உண்மையானது என்று நினைத்தால் இது உங்களுடய அறிவு முதிர்ச்சியின்மையை காட்டுகிறது. எந்த ஒரு ஆணும் தான் பள்ளி பருவத்தில் காதல் வயப்படுவது தான் நேரப்போக்காவோ அல்லது இனக் கவர்ச்சியாகவோ, வசீகரமாகவோ இருக்கும் தவிர 25 வயதில் தான் மணம் முடிக்கும் வயதில் ஒருவன் உண்மையான பெண்ணையே தேடுவான் அந்த நேரத்தில் அவன் பிரதான தேவை உடலாக இருப்பது மிக குறைவு. உடல் சுகத்திற்காகவே அலையும் ஒரு சில காமுகனை தவிர அந்த வயதில் வேறு எவனும் உடல் சுகத்திற்காக ஒரு பெண்ணை காதலிப்பதில்லை.

2. "முதல்ல காதல் என்பதே பொய் அதுவும் 25 வயதை தாண்டியவர்கள் காதலிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் அபத்தத்தின் உச்சம்"

இது தான் காதலைப் பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருக்கும் அறிவின்மை. நீங்கள் சொல்வது படி பார்த்தால் 25 வயதில் யாருமே உலகில் காதலித்து கல்யாணம் பண்ணியது கிடயாது என்பது போலவும் 25 வயதில் காதலித்து கல்யாணம் பண்ணியவர்கள் எல்லாம் செக்ஸ் சுகத்திற்கு மட்டும் கல்யாணம் பண்ணியவர்கள் போல் காட்டுகிறது. நீங்கள் சொல்வது தான் அபத்தத்தின் உச்சம்.

3. "தன் காமத்தை தானே தீர்த்துக்கொள்ள தெரிந்த பெண் இந்த மாதிரி வலைகளில் இருந்து எளிதாக தப்பித்துக்கொள்கிறாள்"

எந்த ஒரு பெண்ணாலும் இதை விட கேவலாமாக யோசிக்க முடியாது. உங்கள் யூகத்தின் அடிப்படையை முற்றிலும் உண்மையாக கூறுவது மிகத் தவறு. தன் காமத்தை தானே தீர்ப்பது தான் சிறந்த செயல் அப்போது தான் ஆணின் சீண்டலில் இருந்து தப்பிக்கலாம் என்று சொல்வது உங்கள் பெண் இனத்தையே நீங்கள் கொச்சை படுத்துவது தான் அன்றி வேறில்லை. தன் காமத்தை தன் மனத்தால் கட்டுபடுத்த தெரியாதவள் தான் பெண், அவள் சுய இன்பத்தால் தான் கட்டு படுத்த முடியும் என்று கூறுவது உங்களுடைய மன பலவீனத்தையே காட்டுகிறது இது மாதிரி தீய கருத்தை அறிவுரை என்ற பெயரில் நல்ல பெண்கள் மீது திணிக்காதீர்கள்.

4. " எல்லா ஆண்களும் நல்லவர்களாக நடிக்கத்தான் செய்கிறார்கள்... நீ செய்ய வேண்டியது ஒன்றுதான்... அவர்களை அப்படியே நடிக்க வைத்து வேடிக்கை பார்த்துவிட வேண்டும்... இது ஆண்களை கையாளும் முறை"

உலகில் எந்த statistics ம் 100% ஆண்கள் கெட்டவர்கள் என்று சொல்லவில்லை அப்படி உங்களிடம் ஏதும் ஆதாரப் பூர்வ ரிப்போர்ட் இருந்தால் காட்டலாம். நீங்கள் நல்ல ஆண்களை தேர்வு செய்வதில் உள்ள குறையை திருப்பி ஆண்கள் மீது திணித்து விடாதீர்கள். உலகில் பெண்கள் எல்லோரும் நல்லவர்கள் போலவும் அவர்கள் தேர்வு செய்யும் ஆண்கள் தான் கெட்டவர்கள் என்பது போல உருவாக்குகிறீர்கள். இரு பாலார்களிடமும் நல்ல குணமும் இருக்கிறது கெட்ட குணமும் இருக்கிறது அது தான் இயற்க்கை. எப்படி ஒரு பெண் ஒரு நல்ல ஆணை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறாளோ அது போல ஒவ்வொரு ஆணும் ஒரு நல்ல பெண்ணை தேர்வு செய்வதில் கோட்டை விடுகிறான் அது தான் மறுக்க முடியாத உண்மை. தன் உடல் இச்சையை தீர்பதற்காக ஆண்களை பயன் படுத்தும் பெண்களும் இவ்வுலகில் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் போனது மிகக் கொடுமை.

5. "Suppose the girl very well knew how to fingering... அவள் பேசுவதற்கே வர மாட்டாள் "

நீங்கள் ஒரு பெண்ணாக இருந்து இது மாதிரி அருவருக்க தக்க கருத்தை வைப்பது எந்த ஒரு ஆணுக்கும் உங்கள் குணநலனை கீழ்த்தனமாக பார்க்க தோணுமே தவிர இதை ஒரு அறிவுரையாக ஏற்க தோணாது ஏன் பெண்களுக்கு கூட நிச்சயமாக இதை அறிவுரை யாக ஏற்க தோணாது. சுய இன்பம் செய் ஆணின் வலையில் இருந்து தப்பி விடுவாய் என்று இப்படி வெளிப்படையாக சொல்வது வெட்கக்கேடு. நீங்கள் கூறும் கருத்து சரி என்று பட்டால் இதை ஒரு awareness ஆக உங்கள் பெண் குழந்தைகளுக்கு இதை சொல்லி கொடுக்க முடியுமா ?

காமத்தை கட்டுபடுத்துவது மனம் மட்டுமே அந்த மனதை கட்டு படுத்துவதை விட்டுவிட்டு இது போல அநாகரீகமான கருத்துக்குளை எந்த பெண்ணுக்கும் கற்பித்து விடாதீர்கள். ஆண்கள் எப்பொழுதும் நல்ல பெண்களும் நிறைய இருக்கிறார்கள் என்று கருதிக் கொண்டிருப்பதை தயவு செய்து உடைத்து விடாதீர்கள்.

6. "ஆணின் காதல் வசனம் எல்லாமே கட்டில் வரைதான்... பெண்ணின் காதல் கொஞ்சம் வித்தியாசமானது அவளுக்கு தேவை காமம் அல்ல...
காமம் முடிந்த பின் தன் இணையோடு கட்டிக்கொண்டு பாதுகாப்பாய் கிடக்கும் சுகம்"

எந்த ஒரு மணமாகாத ஆணிடமும் பொய் கேட்டு பாருங்கள் உனக்கு எந்த மாதிரி பெண் மனைவியாக வேண்டுமென்று நல்ல அன்பான பெண், அடக்கமான பெண், ஒழுக்கமான பெண், தன்னை எப்பொழுதும் புரிந்து நடக்கும் பெண் தான் வேண்டும் எற்று கேட்பானே தவிர எனக்கு கட்டிலில் அதிகம் சுகம் தரும் பெண் வேண்டுமென்று எவனும் கேட்பதில்லை. பெண் மட்டுமல்ல எந்த ஒரு ஆணும் அன்பை முன்னிறுத்தி தான் ஒரு பெண்ணை எதிர்பார்ப்பானே தவிர காமத்தை அல்ல. உங்கள் மனப் போக்கை மாற்றிக் கொள்ளுங்கள் இந்த விசயத்தில்.

தற்போதைய காலக் கட்டத்தில் இல்லற வாழ்க்கை நம் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக நீடிக்கிறது என்றால் அது அன்பின் அடிப்படையிலேயே அன்றி காமத்தில் அல்ல அதற்கு ஆணும் பெண்ணும் துணை பெண் மட்டும் அல்ல. இனிமேலேனும் அறிவுரை என்ற பெயரில் ஆணை மட்டும் விமர்சித்தோ பெண்ணுக்கு தவறான பாதையோ காட்டி விடாதீர்கள். ஒவ்வொரு ஆணும் தனக்கு நல்ல பெண் கிடைக்க வேண்டுமென்று காத்துக் கொண்டிருக்கிறான் அதை கெடுத்து விடுத்து விடாதீர்கள்.


Reply · Report Post