முன்குறிப்பு :

1. இது ஆணாதிக்க பதிவு அல்ல
2. பெண்அடிமைக்கு ஆதரவான பதிவு அல்ல

சமிபத்தில் , ஒரு பிரபல டிவி நிகழ்ச்சியில், பிரபல முன்னாள் நடிகை "அவரோட படம் promotion"காக கலந்து கொண்டார். அதை பார்த்த என் நட்பு வட்டரத்தில் உள்ள சில பெண்கள் "அவங்க சூப்பரா பேசுனாங்க, எவ்ளோ கரெக்ட் பேசுறாங்க, அப்படி இப்படினு" சொல்லிட்டு இருந்தாங்க.

சரி, அவங்க என்ன தான் பேசுனாங்கனு தெரிஞ்சுக்க, நானும் அந்த ப்ரோக்ராம் பாத்தேன். அவங்க சொன்ன கருத்தோட சாராம்சம் இது தான் "பொண்ணுங்க கல்யாணத்துக்கு அப்புறம் அவங்க சுயத்த இழக்குறாங்க, கணவன் , குழந்தைகள் இருக்குறாங்கனு, அவங்க அவங்களோட passion விட கூடாது அத பத்தி தான் இந்த படம் பேசுது".அத பாத்துட்டு சில பெண்கள், குறிப்பா என் நட்பு வட்டாரத்துல உள்ள பெண்கள் சூப்பர் ,செம்ம அப்படி இப்படி சொன்னங்க.

பொதுவா ஒரு கருத்து இருக்கு. பெண்கள் கல்யாணம் ஆனா உடனே அவங்க சுயத்த இழக்குறாங்க, ஆண்கள் இல்ல அப்படின்னு, குறிப்பா கல்யாணம் ஆகாத பொண்ணுங்க கிட்ட நிறைய இருக்கு. இது ஒருவகைல உண்மை. ஆனா , ஆண்கள் அப்படியே இருக்குறாங்கன்னு சொல்றதுல தான் தப்பான புரிதல் இருக்கு. அத பத்தி சொல்றதுக்கு தான் இந்த பதிவு.

பெண்கள் கல்யாணத்துக்கு அப்புறம் சுயத்த இழக்குறாங்க , ஆனா ஆண்கள் , தன்னோட 21 வயசிலே இழக்குறான். அவனுக்கும் ஒரு passion இருக்கும், ஒரு wild life photographer ஆகவோ, ஒரு சினிமா டைரக்டர் ஆகவோ , ஒரு sportsman ஆகவோ, இன்னும் நிறைய இருக்கும். ஆனா தன்னோட குடும்ப சூழ்நிலையால, படிப்பு முடிஞ்ச உடனே தனக்கு பிடிக்காத வேலை செய்றான். குடும்பத்த ஓரளவுக்கு முன்னேரினதுக்கு அப்புறம் அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சுடுவாங்க, மறுபடியும் பொண்டாட்டி குழந்தைகள், அவங்களுக்காக ஓடணும்.

சரி, வேலைல இருந்து retired ஆனதுக்கு அப்புறமா passion follow பண்ணலாம்ன, யாராவது ஒருத்தர் இந்த கிழவனுக்கு இது தேவையான்னு சொல்லுவாங்க (குறிப்பா, மருமகளோ, மருமகனோ, sometimes பெத்த பசங்க கூட சொல்லுவாங்க )

உங்கள எத்தன பேருக்கு தெரியும் , அவன் வேலைல அதிகாரி திட்டறது எல்லாம் பொறுமையா கேத்துகிட்டு இருக்கறது ,எல்லாம் அவன சார்ந்து இருக்கறவங்களுக்காக.

வெளிநாட்டுல/ வெளியூர்ல வேலை செய்றவங்களோட நிலை இன்னும் பரிதாபம்.. சரியான சாப்பாடு இல்லாம , சரியான அரவணைப்பு இல்லாம

சரி, இப்படி வைத்துகொள்வோம், நீ உன் passion பாரு, நான் என் passion பாக்குறேன். அப்போ குடும்பம் சீரா இருக்கும்னு நினைக்கறிங்க ?

சரி , இது எல்லாம் ஏன் சொல்றேன் நாங்க ஏதோ தியாகம் பண்றோம்ன .. இல்ல , இது தான் வாழ்கைன்னு சொல்ல , இது தான் நிதர்சனம்னு சொல்ல. ஒரு நிம்மதியான குடும்ப வாழ்கைக்கு 2 பேரும் விட்டு கொடுத்து வாழ்றாங்க.

கருத்துக்கள் வரவேற்கபடுகிறது. திட்டறவங்க திட்டலாம் , பாராட்டறவங்க பாராட்டலாம். இது முழுக்க முழுக்க என் சொந்த கருத்து.

-- s_for_sound

Reply · Report Post