#உத்தமவில்லன் thoughts by @isai_ Super! #Uttamavillain


@isai_ உத்தமவில்லன்:

மிகவும் பிடித்திருந்தது. களம், நுட்பங்கள், பாத்திரங்கள், உணர்வடக்கம் எல்லாமே சரியான முறையில் அமைந்திருந்தது. நல்லதொரு கதையாடல். :))

குறியீடுகளை தாண்டி, படத்தில் ஆகா கணங்கள் மிக அதிகம். வயதும் கமலின் உணர்ச்சி வெளிப்பாட்டிற்கு நம்பகத்தன்மையை கூட்டுகிறது.

இப்படியொரு கனமான கதைக்கருவை படைப்பாக்கிய கமலுக்கு நன்றி. அவருக்கு இது புதிதில்லை என்றாலும், தத்துவார்த்தமான கேள்விகளுக்கு இயல்பான பதில்கள்.

கலைக்கு முடிவில்லை. இறப்பில்லை. கலைஞனின் மூலம் வெளிப்படும் அது,அவனையும் காலத்தில் நிரந்தமாக செதுக்கிவிடுகிறது. இறப்பை வெல்கிறான்

இறக்கும் நாள் தெரிந்தால் வாழும் நாள் நரகமாகிவிடும் என்ற மொக்கை பஞ்ச் டயலாக்கிற்கான எதிர்வினையாகவும் இப்படைப்பை அனுகுகிறேன். :)))

ஆமாம், உத்தம்வில்லன் தான் காமெடிப்படம். உத்தமவில்லன் அல்ல. படத்தில் படம் பார்க்கலாம். :)) பிரதியின் பிரதி, அதன் குறைகளுடன்.

பல இழைகளும் முடிவில் இணைக்கப்பட்டிருக்கும் விதம் மிகவும் இயல்பாக இருந்தது. பிழிந்து பிழிந்து அழும் காட்சிகளின்றி, நுட்பமாக.:)

படத்தில் மிகவும் உணர்வுபூர்வமான உறவுச்சிக்கல் அதுதான். பிடித்த காட்சிகள் ஆண்ட்ரியா கமல் பகுதி. நடிகனின் வாழ்க்கையில் இது இயல்பு.

கமலின் முதல்மனைவி ஆண்ட்ரியா சாயலில் இருந்தார்போல ஒரு நினைவு. FamilyTree படத்தில் இருப்பது, இளவயது ஆண்ட்ரியா. காதல் இயல்பாக வரும்

மொக்கையாக கழிந்து, கமலின் ஆளுமையுடன் மல்லுக்கு நிற்கும் பிரதியியல் முட்டாள்களின் தன்முனைப்பின் மீது சாணியை கரைத்து ஊற்றியதற்காக, முதல்நன்றி

பிடிப்பில்லா திருமண உறவிலிருக்கும், விரலசைவில் பெண்கள் விழும் நாயகனுக்கு, உணர்வுபூர்வமான ஒரு காதலி இருக்கலாகாதா??

படத்தின் ஒவ்வொரு நகர்வும், பல்லடுக்கு இணைப்புகள், கற்பிதங்கள் கொண்டது. ஆனால் அதுவே படைப்பல்ல.ஆனாலும் அதன் அழகியல், கமலின் ஆளுமைக்கு ஒருதுளி!

கடவுளென்னும் கற்பிதத்திற்கும் இறப்புண்டு. கலைஞனுக்கு இல்லை. கலையே நிரந்தரம். இறவாதிருப்பது இன்கலையே. மனோரஞ்சன்களுக்கு என்றும் இறப்பில்லை. :)

தத்துவார்த்தமாக பல கேள்விகளை எழுப்பினாலும், இறப்பை கொண்டாட்டமாக்கி, கலையின் மூலம் நிலைந்து நிற்கும் அந்த முடிவு!! _/\_

குடும்பத்துடன் சென்று பாருங்கள். உறவுகள் செழுமையடையும். தவறுகள் மன்னிக்கப்படும். வாழும் நாட்கள் வசந்தமாகும். இருத்தலின் மகத்துவம் புரியும்.

அனைத்து படைப்புகளிலும் கமலை பார்த்து, முரண்பட்டு, இங்கு கமலை கமலாகவே பார்த்து, அந்த மகாகலைஞனின் உளவேட்கயை முதன்முறையாக ஆமோதித்தது, வெற்றி!!

@isai_ "இருத்தலின் மகத்துவம் புரியும்" 👌👌👏👏👍👍

பூஜா குமார், அமர்க்களம். Eva Green, anyone?! இன்னும் பலகாட்சிகள் வைத்திருக்கலாம். புலியென உறுமுகிறார்.வாவ்!! வெடிச்சிரிப்பும் வெறியுறுமலும்!

கமல் மீது எனக்கும் காத்திரமான கேள்விகளுண்டு. இந்த படைப்பை பொறுத்தவரை, மிகவும் நேர்மையாக அனுகியிருக்கிறார். :)

வாழ்வின் மீதான புரிதலை தெளிவாக்குகிறது. நேர்கோட்டு வாழ்க்கை எல்லோருக்கும் சாத்தியமில்லையே?!!

Reply · Report Post