என் நாடு, என்னுரிமை !!!


வணக்கம் தோழர்களே!

கொஞ்ச நாளாவே ட்விட்டர் ஃபேஸ்புக்குன்னு எங்க பாத்தாலும், நாமளே ஓட்டு போட்டு நாமளே தலைவரா தேர்ந்தெடுத்த நம்ம நாட்டு பிரதமர கலாய்ச்சிட்டுருக்காங்க, கூட சேர்ந்து கலாய்க்கவோ அல்லது வேடிக்கை பாக்கவோ தோணாத என் புத்திக்கு ஏன் இப்டி கலாய்க்கிறாங்க,அப்டி என்ன தப்பு பண்ணிட்டாருன்னு ஆராய போனா, எவன கேட்டாலும், அவரோட வெளிநாட்டு பயணங்கள காரணமா சொல்றான்

சரி அவன் என்ன செய்வான் பாவம், தேர்தல்ல ஜெய்ச்சதும் எஸ்டேட் பங்ளால, பீச் ஹவுஸ்லன்னு ஜாலி பண்ற தலைவனையும், தேர்தலுக்கப்பறம் தொகுதி பக்கம் தலையவே காட்டாத தலைவனையும் பாத்து பழக்கப்பட்டுட்டான். இந்தாளு பேசாம ஜெய்ச்சதும், நான் தான் பிரதமர்,நாட்டின் தலைவர்னு டேபிள்ள உக்காந்து டெய்லி ஒரு அறிக்கை விட்டோமா, பாராளுமன்றத்துல பிட்டு படம் பாத்தோமான்னு இல்லாம எதாச்சும் புதுசா பண்ணிட முடியாதான்னு ஊரூரா சுத்துறாப்டி.

இந்த டுலா எழுத தூண்டுதலாக இருந்த எனது ஆசான் ட்விட்டர் ஃபேமஸ் திரு. ரவிக்குமார் எம்ஜியார் அவர்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டு இந்த டுலாவை ஆரம்பிக்கிறேன்?(இப்ப தான் ஆரம்பிக்கவே போறியான்னு நெனைக்காம ஒரு 10நிமிஷம் செல்வு பண்ணி Pls read)
வழவழன்னு பேசாம வளமா ஒரு 3 தலைப்புல பேசுவோம் (உமக்கு எவ்வளவு தேவபடுதோ அவ்வளவ வச்சிகிட்டு மீதிய திருப்பி குடுத்துரூம்)

1. பிரதமர் மோடியின் பன்னாட்டு பயணம் ஏன்
2. #ModiInsultsIndia
3. ஒரு சிட்டிசனா நாம என்னத்த கிழிச்சோம்?

No1 பிரதமர் மோடியின் பன்னாட்டு பயணம் ஏன்?
- 42 வருடங்களுக்குப் பிறகு கனடா போயிருக்கார் பாவம், விளைவு? ஒன்னுமில்லீங்க 5 வருஷத்துக்கு அவங்க நமக்கு யுரேனியம் தர்றதா ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாயிருக்கு, அதிருந்தா தானே மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்?
- ஜப்பான்,வியட்நாம்,இலங்கை,நேபாளம்,பூடான் மற்றும் மியான்மர் போன்ற வெளிநாட்டு பயணத்தால் ஆசியாவில் சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. தெரியுமா?
உ.தா – இலங்கையில் சீனா உதவியுடன் அமையவிருந்த துறைமுகம் தடை மற்றும் அங்குள்ள குருடாயில் டெர்மினலில் உள்ள சேமிப்பு டேங்குகளில் (Storage Tanks) புனரமைக்க சீனவை பின்னுக்கு தள்ளி இந்திவுக்கு கிடைக்க செய்தது. அத இப்போ இந்திய நிறுவனமான IOC செய்யப்போறதவது தெரியுமா?
- அப்றம் தென் கிழக்கு சீன கடற்பகுதியில் சீனா ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்ட இயற்கை எரிவாயு (OFFSHORE NATURAL GAS EXPLORATION) எடுக்கும் திட்டம் மற்றும் அதை சார்ந்து கரைக்கு (ONSHORE RECEIVING TERMINAL)கொண்டு வந்து ஆலை அமைக்கும் திட்டம் போன்ற சீனாவுக்கு கிடைக்கவிருந்த திட்டங்களை இந்தியாவிற்கு கிடைக்க செய்த்து மோடியின் வியட்நாம் பயணம். தமிழ்நாட்லேர்ந்து வியட்நாம்க்கு கப்பல் போக்குவரத்து திட்டம் சைன் ஆயிருக்காம் தெரியுமா?
சீனாகூட நட்பா இருக்குற மாதிரியே இருந்துட்டு இப்டி செய்யுறதால சீனா வேணா மோடி மேல கோவப்படலாம். நாம ஏண்டா கோவ படுறோம்?
உலக நாடுகளிடமிருந்து பிரதமர் மோடி அவர்கள் திரட்டியுள்ள நிதி ஆதார விவரங்கள்
ஜப்பான் பயணத்தில் – 210000 கோடி
ஆஸ்திரலிய பயணத்தில்- 135000 கோடி
அமெரிக்க பயணத்தில் – 65000 கோடி
பிரான்ஸ் பயணத்தில் – 85000 கோடி
ஜெர்மனி பயணத்தி; - 160000 கோடி
கனடா பயணத்தில் – 90000 கோடி

இப்படி கோடிக்கணக்கான நிதி ஆதாரங்கள திரட்டுன அவரு மோடி இல்லடா பல்லாயிரம் கோடி

இங்க இந்தியாவுலயே பத்து வருஷமா பெஞ்சுலயே உக்காந்து நொட்டுன மன்மோகன் அய்யாவுக்கு இவர் பரவால்லன்னு தோணல?
சரி மோடி தான்யா வேலவெட்டி இல்லாம உலகம் சுத்துறார், அவர் போற நாட்டு மன்னர்களும் அதிபர்களுமா வேல வெட்டி இல்லாம இவருக்கு வரவேற்பும் விருந்தும் குடுத்துக்கிட்டு மோடிகூட சுத்திட்ருக்காங்க? காரியம் நடக்காமலா அவனுக வரவேற்பு குடுக்குறானுவ?

நேருலேர்ந்து மன்மோகன் வரைக்கும் நடந்த ஆட்சில இந்தியா கடன் வாங்குனதா தானே படிச்சிருக்கோம், இப்போ மங்கோலியா மாதிரி சின்ன நாடுகளுக்கு நாமளும் கடன் குடுக்க ஆரம்பிச்சிருக்கோம்.. எப்டி நமக்கு கடன் குடுத்து நம்மள அடிமையாக்குனாங்களோ அதே டெக்னிக் தான்

No.2 #ModiInsultsIndia

என்ன இந்த ஹேஷ் டேக்குன்னு தெரியாதவங்களுக்காக சொல்லிக்கிறேன், கில்லி படத்துல விஜய் ”இண்டியன் எக்கானமி இஸ் தி பெஸ்ட் எக்கானமி”ன்னு அரகொற இங்கிலிசுல பேசுறாப்டி ஒரு மீட்டிங்ல பேசும்போது பிரதமர் மோடி என்னமோ சொல்லப் போக அதை தவறாக பரப்பிய PRESStitutes (மன்னிக்கவும்)காரங்க,
உடனே நம்மளமாதிரி ட்ரெண்ட் செட்டர்ஸ் இந்த ஹேஷ் டேக்க ட்விட்டர்ல ட்ரெண்ட் பண்ணிட்டாங்கே..
உண்மையில் நடந்த்தென்ன, அவர் என்ன பேசிருக்காரு?
Q. what exactly did he say?
Modi: in an hour long speech, somewhere midway, he started talking about Indian economy & investor sentiment. He said that of late, some of the biggest organisations in the world like IMF, world bank etc have been acknowledging high economic growth in india. Even those who were very pessimistic, had given up hopes & used to say “ Leave it yaar, nothing can happen in this country, I don’t know why I was born here”(ஷிவாஜி படத்துல அரசாங்கத்தால கஷ்டப்படுற ரஜினி மாதிரி ஆளுங்கள குறிப்பிட்டிருக்கிறார் போல) are now being optimistic. If there is one country which the whole world is talking about today, it is india.
இது தான் அவுரு சொன்னது, இத இந்த மீடியாக்கார மச்சானுக எப்டி சொல்லிருக்கானுக
A:(according to press)
“PM Modi insults india, he says Indians were ashamed of being Indians before he became PM” அப்டின்னுட்டானுவ… ”இண்டியன் எக்கானமி இஸ் அல்வேய்ஸ் அவர் எக்கானமி”..
த்தூ இது தெரியாமலயே நெறயபேர் அந்த ஹேஷ்டேக்ல மோடி மேல தமக்கிருந்த காழ்ப்புணர்ச்சிய காட்டி ட்ரெண்ட் பண்ணிட்டானுக…
இந்த ஹேஷ்டேக்க தூக்குறதுக்கு ட்விட்டர்க்கு இந்திய அரசாங்கம் 200கோடி கொடுத்ததா வர்ற புகார நம்புற நீங்க, இப்ப நான் சொல்றதயும் நம்ப தயாரா??
- எங்க மோடி ஆட்சில இருந்தா இந்தியா வல்லரசாகிடுமோன்ற பயத்துல, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் பல லட்சம் கோடிகள் கொடுத்து உள்நாட்டில் மோடிக்கு எதிராக கிளர்ச்சியை தூண்டுகிறார்கள்
- பாகிஸ்தான் போன்ற இந்தியாவை அழிக்க நினைக்கும் திவிரவாத நாடுகள், இந்திய(வெகுசில)முஸ்லீம்களுக்கு பணத்தைக் கொடுத்து, மோடி ஒரு இந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சார்ந்தவர், என்ற மதவாத அடிப்படையைக் காட்டி அவரை அழிக்கத் தூண்டுகிறார்கள்
- இது போதாதுன்னு மிச்சர் தின்னிகளாம் எதிர்க்கட்சிகள் மோடி 2g மாதிரி 5g,6gன்னு ஊழல் பண்ணுன ரேஞ்சிக்கு பேசுவாங்க, முஸ்லீம் சகோதரர்களுக்கு மோடி மேல் கோபத்தை தூண்டவே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை அவ்வப்போது நினைவூட்டுவதும் இவர்களுக்கு வாடிக்கை, இதன் நோக்கம் முஸ்லீம் தோழர்களுக்கு குரல் கொடுப்பது அல்ல, இசுலாமிய சகோதரர்கள் மத்தியில் மோடியின் மதிப்பை கெடுப்பது. மோடி அமெரிக்காவுக்கு சென்றபோது, அவரை இந்திய கொடியைக் காட்டி அன்போடு வரவேற்ற இந்திய முஸ்லீம்களை மறந்துவிடவேண்டாம்.
-

No . 3 ஒரு சிட்டிசனா நாம என்னத்த கிழிச்சோம்?/ ஒரு சிட்டிசனா நம்ம கடமை என்ன?

தல நடிச்ச சிட்டிசன கலாய்ச்சு தான் நமக்கு பழக்கம், சிட்டிசன்னா யாரு, அவனோட கடமை என்னன்னு நமக்கென்ன தெரியும்??(என்னையும் சேத்து தான்)
ஒரு வெவர மயிரும் தெரியாது, எவனாச்சும் எங்கயாச்சும் எதாச்சும் நடந்துச்சுன்னு சொன்னான்னா, அது என்னன்னே தெரியாம கலாய்க்க ஆரம்பிச்சிர்றது,
நேத்து மோடிய கலாய்ச்ச நாயி ஒன்னு தான் எலக்க்ஷனப்போ மோடி அலை, ஆப் கி பார் மோடி சர்க்கார்னு ட்வீட் போட்டு பாராட்டிகிட்ருந்துச்சி, இந்த நாயி தான் மன்மோகன் சிங் பிரதமரா இருக்கும் போதும் அவர கலாய்ச்சிது, கலைஞர கலாய்ச்சிது, அம்மாவ கலாய்ச்சிது, இதே நாய் தான் இப்போ மோடியையும் கலாய்க்கிது..
சரி கலாய்க்கிறது உன் உரிமைன்னா, ஒரு நாட்டோட குடிமகனா ஒன் கடம என்ன?? உனக்கு யார் தாம்டே சிஎம் பிஎம்மா வேணும்? யார் வந்தா உன் வாய மூடுவ? சகாயம் ஐ.ஏ.எஸ், ஏபிஜேவா இல்ல அர்விந்த் கெஜ்ரிவாலா?? அவரையும் ஒரு வருசத்துக்கு முன்னாடி பாராட்டுன, அப்றம் போன வருஷம் கலாய்ச்ச.
லூசாடே நீ, உன் மனசு ஒரு நிலைல நிக்காதா?? சரி ஒருத்தன் நல்லது பண்ணும்போது பாராட்டுறதும் கெட்டது பண்ணும்போது தூற்றுவதும் வாடிக்கை தான், ஆனா விதண்டாவாதி மாதிரியே காலத்துக்கும் கலாய்ச்சிட்டே இருந்ஏகஅ ஊணுன?
(இங்க நான் குறிப்பிடுறது ஒரே ஒரு ஆள மட்டுமில்ல, நெறய பேர், இத படிக்கும் போது உனக்கும் கோவம் வந்தா நீயும் அந்த நாயில் ஒருவனே)
ஒரு நாட்டோட குடிமகனா நீயும் நானும் நம்ம மக்களும் சேர்ந்து அவர பிரதமரா தேர்ந்தெடுத்தாச்சி, அவர் மேல இருந்த நம்பிக்கைல தான அவர செலக்ட் பண்ணோம்? சரி நீ அவருக்கு ஓட்டுப்போடல்ன்னாலும்,பெரும்பான்மை மக்கள் அவருக்குத்தானே ஓட்டு போட்ருக்காங்க? அந்த மக்களுக்காகவாச்சும் அவருக்கு மரியாதை குடுங்க.

மேல சொன்ன பயணங்களின் போது கையெழுத்திட்ட ஒப்பந்தம், இன்னும் சில ரகசிய திட்டங்களலெல்லாம் கொய்யால ஒன்கிட்ட வந்து ஒன்னு ஒன்னா சொல்லிட்டு செஞ்சிட்ருக்க முடியுமா?? மத்தவன்னா நா அத கிழிக்கப்போறேன் இத கிழிக்கப்போறேன்னு சீன் போட்டு மாநாடே போட்ருப்பான்,எறங்கி வேல செய்ய மாட்டான்,
குஜராத் பின்தங்கிய மாநிலம் தான் ஆனா அதையே இந்தியாவில் ஒரு எடுத்துக்காட்டு மாநிலமா மாத்திக்காட்டுனதால தான நாம அவரு மேல நம்பிக்க வச்சி செலக்ட் பண்ணிருக்கோம்? அதே மாதிரி இந்தியாவையும் மாத்துவாருன்னு நம்பி, கொஞ்சம் பொறுமையா இருந்து அவர் என்னத்த கிழிக்கிறார்னு பாரு..
கொஞ்சம் கூட தொலை நோக்கு பார்வையே இல்லாதவர்களுக்கும், மதத்தில் மூழ்கி தன்னிலை இழந்தவனுக்கும், ஊழல்வாதிகளுக்கும்,தாலியறுத்து அரசியல் செய்யுறவனுக்கும் தான் அவர ஆட்சியவிட்டு தூக்குறதுல அவசரம், உனக்கேன் அவசரம்? சும்மா இங்கன ட்விட்டர நோண்டிகிட்டு தான கெடக்க, பொறுமையா இருக்கலாம்ல.. ஒரு நாட்டோட பிரதமர இவ்ளோ ஓப்பனா கலாய்க்கிறதுக்கு நமக்கிருக்கிறதுக்கு பேரு தான் உரிமை/சுதந்திரம், ((மஸ்கட்டுல சவுதில இருந்துகிட்டு அந்த நாட்டு மன்னர கலாய்ச்சி பாரு தெரியும், இப்டித்தான் ஈரான்ல நம்ம மச்சான் திருக்குமரன் மன்னர கலாய்ச்சி நேத்து ஸ்டேசனுக்கு போய்ட்டு வந்துருக்கான்))

ஒட்டுப்போட்டு சீட்டுல உக்காரவச்சி நாட்ட ஒருத்தன நம்பி ஒப்படைக்கிறோமே அது நம்ம கடமை, நாம நம்ம கடமைய செஞ்சிட்டோம், அவர அவரோட கடமைய செய்யவிடுங்க,

அவரோட திட்டமிடுதல் தவறுன்னா, மக்கள் வாக்களிப்பின் போது தீர்ப்பளிப்பார்கள்(நாமளும் தான்).

நீ பரவால்ல சில வெளிநாடு வாழ் இந்தியர்கள், வெளிநாட்டவர்கள்னு கண்டவன்லாம் அவர கலாய்க்கிறது, நீ சிங்களனா இருந்துட்டு போ இல்ல சிங்களத் தமிழனா இருந்துட்டு போ, யாரா வேணா இருந்துட்டு போ, ஒரு தமிழனா உனக்காக குரல் கொடுப்பது எனது தலையாய கடமை, ஒத்துக்குறேன், ஆனா அதுக்காக எங்க நாட்டையோ நாட்டோட தலைவரையோ கலாய்க்க உனக்கென்ன உரிமை இருக்கிறது? இனிமே எதாச்சும் என் நாட்ட பத்தி பேசுன,அப்றம் நா வண்ட வண்டையா திட்டுவேன் தூக்கி அடிச்சிருவேன் பாத்துக்க…
சரி அப்படியென்ன உமக்கு எங்கள் நாட்டின் மீதும் நாட்டு அரசியல் மீதும் அக்கறை? சாதரண ஒரு கிரிக்கெட்டில் நாங்கள் ஜெய்ப்பது பொறுக்காமல் உங்கள் அணியாம் சிங்கள செம்மல்களுக்கு சப்போர்ட் பண்ற நீங்க, எங்க நாட்டையும் நாட்டு அரசிய்யலையும் விமர்சிக்க தகுதியற்றவராகிறீர்கள்.. பொத்திட்டு இருங்க தோழர்களே..

ஒரு நல்ல குடிமகனா ஒரு நாட்டோட தலைவன் செயல்படுத்தும் திட்டங்களை(ஸ்வாஜ் பாரத் போன்ற) மதிப்பது மட்டுமல்லாது அதை செயல்படுத்த நாமளும் உதவனும், ஓட்டுப் போட்டதோட கடமை முடியல அதுக்கப்பறம் தான் உன் கடமை ஸ்டார்ட் ஆவுது(இதுக்கு தனியா ஒரு டுலாவே எழுதலாம்), அதுக்காக மோடிய கொறையே சொல்லக்கூடாதுன்னு சொல்லல, கொறமட்டுமே சொல்லிக்கிட்ருக்காத மடையா…
எத்தனையோ வருஷம் பொறுமையா இருந்துட்டோம் ஒரு அஞ்சு வருஷம் பொறுமையா இருந்து மோடி என்ன பண்றாருன்னு பாப்பமே?

பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவி சாய்த்தால்
மகத்தான காரியம் எதையும் செய்யமுடியாது

இப்டித்தான் மோடியும் ஒரு தொலை நோக்கு பார்வைல ஓடிட்ருக்காருன்னு நம்புவோம், நல்லது பண்ணா வரவேற்போம், கெட்டது பண்ணா அடுத்த எலக்ஷன்லயே வெளக்க மாத்தால அடிச்சி தொரத்துவோம் தோழர்களே.. அதுவரை காத்திருங்கள் தோழர்களே.. காத்திருப்பது தான் நம் தலையாய கடமை
இப்படிக்கு,
பொறுமையுடன் கேப்டன் வேலு. 

பி.கு:
1. குற்றம் செய்தவனைவிட தூண்டியவனுக்கே அதிக தண்டனை (முதல் பக்கத்தை படிக்கவும்)
2. இந்த பதிவு மற்றும் சம்மந்தப்பட்ட டேட்டாக்கள் 100% ஆங்காங்கே காப்பியடிக்கப்பட்டதே, ஆகையால் யாரும் காப்பி ரைட்ஸ் கேட்டு வர உரிமை இல்லை
3. இப்டி எழுதுறதுனால நான் மோடி சப்போர்ட்டர் என்றோ, பிஜேபி காரனென்றோ நினைத்துவிட வேண்டாம், இதுவரை இருந்த தலைவர்களில் மோடி பரவாயில்லை என்று எனக்கு தோன்றுவதே காரணம்
4. டுலா போட்ட்தால் நான் வேலை வெட்டி இல்லாதவன் என்று எண்ணவேண்டாம், ஐயம் வெரி பிசி.. சோ உங்க கேள்விகளையும் டுலாவாக வெளியிட்டால் மட்டுமே பதில் வரும்
5. புள்ளி விவரங்கள் சும்மா அடிச்சி விடப்பட்டவைகள் அல்ல.. உண்மையே
6. இந்த பதிவின் மூலம் யார் மனதாவது புண்பட்டிருந்தால், காத்திருக்கவும், மனதின் புண்ணை குணப்படுத்த மருந்து கண்டுபிடித்துவிட்டு வருகிறேன்
7. என் இஷ்ட்த்துக்குத் தான் நான் எழுதுனேன், இதை எழுத சொல்லி மோடி எனக்கு 200கோடி ரூபாய் பணம் தரவில்லை
8. அயல்நாட்டவருக்கு இதை படிக்கவோ பகிரவோ, கண்டம் அல்லது பாரட்டவோ உரிமையில்லை
9. குறிப்பாக இதை எனது ஃபர்சனல் லைஃபோடு கம்பேர் செய்து கேலி செய்வது தூக்கு தண்டனைக்குரிய குற்றம், இது பொதுவுடமை ;)

Reply · Report Post