மூத்த விஜய் பாடும் புரட்சிப் பாடல் #புலி#பாடல்#4


பல்லவி:

மனிதா மனிதா
தன்மான மனிதா
புயலாய் எழுந்து
போராடு மனிதா

காற்றின் பிள்ளைகள் நீங்கள் – இந்தக்
காடே உங்கள் உரிமை
யாரும் இல்லை அடிமை – அட
யாவும் இங்கே பொதுவுடைமை

சரணம் 1:

கூட்டுப் பறவைகளாய் – இந்தக்
காட்டில் பிறந்தோம் கைவீசித் திரிந்தோம்
தேகத்தின் வேர்வையினால் – நல்ல
தினையும் வரகும் பயிர் செய்தோம்

பட்டாம் பூச்சிகளாய் – இங்கு
பறந்தும் திரிந்தும் ஒண்ணாக வளர்ந்தோம்
வஞ்சகர் சூழ்ச்சியிலே – நம்
வாழ்க்கை தேய்ந்தது பின்னாலே

உடையட்டும் உடையட்டும்
விலங்குகள் உடையட்டும்
முடிவெடு தமிழ் இனமே

திசையெட்டும் திசையெட்டும்
தெறிக்கட்டும் திறக்கட்டும்
புறப்படு புலி இனமே

சரணம் 2:


மண்ணின் மைந்தர்களே – சொந்த
மண்ணை மீட்போம் என்னோடு வாங்க
ஆயுதம் தேவையில்லை – சில
ஆயிரம் பேர்கள் கைகொடுங்க

வாழ்வது ஒருமுறைதான் – உயிர்
போவதும் போவதும் ஒருமுறை தானே
தலைமுறை வாழ்வதற்கு – சில
தலைகளை பலியிடத் தயங்காதே

விதிகளும் பொடிபட
வேதனை உடைபட
விடுதலை கொடுத்துவிடு

விடிவதில் விடிவதில்
தாமதமானால்
வானத்தைக் கிழித்துவிடு

Reply · Report Post