முழு மது விலக்கை நான் எதிர்க்கிறேன்.

முதலில் எதற்காக மது விலக்கு வேண்டும்? அது எங்காவது இருக்கிறதா? அண்டை - அயல் மாநிலங்களில், வெளிநாடுகளில்?? உலகத்தின் மொத்தப் பரப்பில் 5% ற்கும் குறைவாகவே மது விலக்கு கடைப்பிடிக்கப் படுகிறது. மது இருக்கும் நாடுகள் எல்லாம் நாசமாகப் போய்விட்டதா?

தமிழகத்தில் குடி ஒரு பிரச்சனையில்லையா என்று கேட்டால் - ஆமாம், பிரச்சனைதான். ஆனால், அதற்குத் தீர்வு முழு மது விலக்கு அல்ல. கையில் சூட்டுக் கட்டி வந்தால், அதற்காக கையையே வெட்டி எறிவார்களா என்ன? வயது வந்தோர்க்கு மட்டும் மது விற்பனை செய்தல், குடியிருப்புகள் / பள்ளி / கல்லூரி அருகில் மதுபானக் கடைகளை அகற்றுதல் போன்ற ஏற்கனவே சட்டத்தில் இருப்பவற்றை முழுக்க நிறைவேற்றினாலே போதும்.

சிலர் விலையை அதிகம் ஏற்றலாம், குடிப்பது குறையும் என்கிறார்கள். ஏற்கனவே மிக அதிக விலை வைத்துத்தான் விற்கிறார்கள். இன்னமும் விலையை ஏற்றுவது, ஏழைகளை மதுவின் சுகத்திலிருந்து முழுக்க அந்நியப்படுத்தும்.

மது எனக்கு உதவிய அளவிற்கு எந்த மனிதனும் உதவியதில்லை. நான் பைத்தியமாவதைக் காட்டிலும், மது அருந்துவதையே தெரிவு செய்வேன்.

போதை என்பது மனிதனின் ஆதாரத் தேவை என்று நம்புகிறேன். அப்படி இல்லையென்று கருதுபவர்கள் மது பாவிப்பாதிருப்பார்களாக.




Reply · Report Post