விவசாயிகளின் கண்ணீர்,வியர்வைக்கெல்லாம் வருத்தப்பட்டு வரும் டிவிட்கள பார்க்கும் போதெல்லாம் தோண்றது, இவங்க இப்படி டிவிட் போட்டு என்ன சாதிக்கப்போறாங்க... ஏதாவது அவங்களுக்கு உருப்படியா பண்ணலாமேன்னு.. இது சம்மந்தமா (அத ஓட்ட போய்) விவாதம் (எ) சண்டையும் போட்டிருக்கேன்.

இப்ப என் நண்பரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து விவசாயிகளுக்கு களத்தில் இறங்கி உதவி செய்ய ஒரு முயற்சி எடுத்திருக்காங்க... வாய்கிழிய பேசிட்டு அப்படி ஒரு முயற்சி நடக்கும் போது நாம ஆதரிக்கலன்னா எப்படி?

மேட்டர் இது தான், அவர்கள் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்வதற்கான பயிற்சி, அதற்கான உபகரணங்கள், அதை விற்பனை செய்வதற்கான உதவிகள் போன்ற சில விஷயங்கள CSA (Center for sustainable Agriculture) வுடன் இணைந்து செய்யலாம்ன்னு இருக்காங்க... அதை ஒரு இயக்கமா ஆரம்பிச்சிருக்காங்க... மூணு நாள் முன்னாடி தான்...

அதைப்பற்றி அறிமுகம் - https://www.facebook.com/DCStarchampion/posts/10206320501066090?__mref=message_bubble
அதற்கான முகநூல் பக்கம் : https://www.facebook.com/SaveIndianFarmersYesYouCan/

படிச்சி பார்த்து விருப்பம் இருந்தா உதவுங்க... குறிப்பா அந்த விவசாயிகள் டிவிட் போடறவங்க கவனத்திற்கு ;)))

நன்றி! வணக்கம்!





Reply · Report Post