புலிப் பார்வை :)


புலி ..
ஊரு உலகமே பார்த்து விமர்சனம் போட்டுகிட்டே இருந்தாலும் மறுநாளே பார்த்தும் மீ மூச்சு கூட விடல..நாட்ல இந்த விமர்சனம் பண்றவங்க தொல்லை தாங்க முடியலப்பா க்கள் ஏற்கனவே நிறைய இருப்பதால்.. ஆனா ஆகோ ஓகோ தமிழின் முதல் முயற்சி ன்னு லாம் பேசறப்ப எனக்குத்தான் ஞே ன்னு இருக்கு..சரி ஒரு கையெழுத்து தான போட்டுட்டுப் போவோம் கழுத என இந்த விமர்சனமும்..

ஒரு மாஸ் ஹீரோ படத்துக்கு (உன்மைதான விஜய் ரசிகர்களே?) எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போங்க என்பது எவ்வளவு பெரிய அபத்தம்..அதுவும் சிம்புதேவன் பாகுபலியை விட பத்து மடங்கு நன்றாக இருக்கும் என்றதாக செய்தி வந்தபின்...
ட்ரைலர் எல்லாம் எனக்கு மிகப் பிடிக்கவே செய்தது..அதனால் இணைய விமர்சனங்கள் பற்றி எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிம்புதேவன் மீது நம்பிக்கை வைத்தே சென்றேன்..ஆனால் ஏமாற்றமே..
விஜய் வழக்கமான பாணியில் இருந்து வேற புது முயற்சி எடுத்ததுக்கு பாராட்டுக்கள் ஆனால் சிம்புதேவன் அவரையும் நம்மையும் ஒரு சேர ஏமாற்றி இருக்கிறார்..
சின்ன வயசுல டிவியில் பழைய ஜெமினி சிவாஜி இதர தெலுங்கு ஹீரோ டப்பிங் படங்கள் பார்த்ததுண்டு..ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒரு குகைக்குள்ள மந்திரவாதி உயிர் இருக்கும்..அதைத் தேடி அழிச்சு அப்புறம் தனது பழைய உருவம் பெறுவது இப்படியாக ..fantasy தான் என முடிவெடுத்துட்டா சிம்புதேவன் இப்படியான படங்களில் ஒன்றைக் கூட remake செய்திருக்கலாமே.. லாஜிக் இருக்காது தான் ஆனால் perfection இருக்கும்..விஜய்க்கும் ஒரு மறக்க முடியாத படமாக இருந்திருக்கும்.. அதை விட்டு இப்படியா அரைகுறையாக? எங்கே பாகுபலியை அப்படியே எடுத்தா பஞ்சாயத்து ஆகிடுமோன்னு சில விஷயம் மட்டும் உருவி இருக்காங்க..பாகுபலி ரிலீஸ் ஆனபிறகு சில டச்சிங்க்ஸ் இருந்திருக்குமோ?
1. ஆத்துல குழந்தை வந்து அதை மலை வாழ் மக்கள் எடுத்து வளர்ப்பது
2.சத்யராஜ் அடிமை..அதே போல ஒத்தைக் கண்ணன் என்ற அடிமை (சத்யராஜ் காலில் விழுந்து வணங்குவது போன்றே அப்படியே இதிலேயும் )
3.சத்யராஜ் கதை எடுத்துச் சொல்வது போல இதுல சங்கிலி முருகன் பாகுபலி அதாவது இன்னொரு விஜய் பத்தி கதை எடுத்துச் சொல்றாரு.
4.வஞ்சகத்தால் இறத்தல்..
இதுல எங்க இருக்கு ஒரிஜனல் கதை?நான் லாஜிக் லாம் கேட்கல..ஆனா திரைக்கதை ஒழுங்காக இருக்குதா?
யாரைத்தான் சரியாக பயன்படுத்தி இருக்காங்க இந்தப்படத்தில்?
விஜய் அறிமுகக் காட்சி பார்க்கவும் அட வித்தியாசமா யோசிச்சு இருக்கார் இனி படமும் அப்படி இருக்கும்னு நம்பினா வேற மாதிரி போகுது.
சுருதி படிக்க பக்கத்து தேசம் போனாங்களாம்.. என்ன MBA வா ? அவங்களுக்கும் அந்தக் கிராமத்து சூழலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா? உடைகள் எந்த விதத்தில் இவங்க கதைக்குப் பொருந்துது..அநியாயத்துக்குப் பளிச் ன்னு இருக்கு..தனியே உறுத்தலாக..விஜய்க்கு கூட நல்லா தேர்ந்தெடுத்து இருந்தாங்க.. இதுல குரல் வேற..ட்ரோல் செய்யும் எண்ணமில்லை சத்தியமா அவங்க வேற டப்பிங் ஆர்டிஸ்ட் வச்சா அடுத்து வரும் படங்களில் தப்பிச்சுடுவாங்க..லிப்ஸ்டிக் ரெண்டு டப்பா காலி ஆக்கி இருப்பாங்க போல..அவ்வளவு அழுத்தம்..இயன்றவரை எவ்வளவு காட்ட முடியுமோ அவ்வளவு காட்டி குத்தாட்டம்.. குழந்தைகள் படம்ன்னா இது எதுக்கு?

சரி குள்ளர்கள் கூட்டம் எனக் காட்டவும் ஆகா என சற்றே சுவராசியம் காட்டி உட்கார்ந்தால் , அங்கயும் சுருதி வந்து டமுக்குடிப்பா டிய்யாலோ ன்னு ஆடுது..ஐன்ஸ்டீன் காமாட்சி ஆல்பா காமா பீட்டா ன்னு பேர்..சரிங்க காமெடிக்காக வச்சிருக்கார் ன்னே வச்சுக்குவோம்..அப்பப் படம் காமெடிப் படமா?அப்படி என்றால் முழுக்க புலிகேசி மாதிரியே எடுத்திருக்க வேண்டியது தானே..இப்படியா சூரமொக்கை போடுறது..அந்தப் புலிகேசி எடுத்த சிம்புதேவனா இது?

சமீபத்தில் டிவியில் தான் ஏதோ ஒரு குள்ளர்கள் படம் ஒரே ஒரு காட்சி பார்த்தேன்..வழி தவறி வந்த சிறுமியை குள்ளர்கள் உண்ண எடுத்து வந்து பிறகு டைனோசர் வரவும் தெறித்து ஓடுவார்கள். அக்குழந்தை அந்தக் குள்ளர்கள் வணங்கும் மரப் பொந்தினுள் ஒளிந்து கொள்ளும். பிறகு அதிலிருந்து வெளி வரும் குழந்தையை ஆர்ப்பரிப்பார்கள் குள்ளர்கள்..சாதாரண பழக்கப்பட்ட கதைதான்..ஆனா அதை அவ்வளவு அழகா காட்சி செய்திருப்பார்கள்..அப்படி இதிலே குள்ளர்களுக்கு என்ன முக்கியத்துவம் கொடுத்தாங்க..விஜய் ஒவ்வொருவரிடம் இருந்து போராடி அக்காட்சிகளை சுவராசியமாக்கி ஜெயித்து ஜெயித்து இலக்கை அடைவதாகக் காட்டி இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்..(இது என் ஐடியா அல்ல..பழைய fantasy படங்களில் அப்படித்தான் காட்டி இருப்பார்கள் )
எல்லாமே விட்டகுறை தொட்டகுறையாக தொங்கி நிக்குது..
விஜய் ஹேர் ஸ்டைல் லாம் பார்க்கவும் இந்தக் காலத்து ஆசாமி டைம் கிராப்ட் ல வேறு ஒரு உலகத்தில் நுழைகிறாரோன்னு நினைச்சுக் கற்பனை செய்திருந்தேன்..லாஜிக்கே தேவையில்லன்னு முடிவு பண்ணவும் ஏகப்பட்ட சொதப்பல்கள்..
சரி பல ஆண்டுகளுக்குப் பிறகு ரீ என்ட்ரி ஸ்ரீ தேவிக்கு..அதுவும் பாகுபலி ரம்யா ரோல் செய்ய வேண்டியவங்க..அப்ப இந்தப் படத்துக்கு எப்படி செய்திருக்கணும்..அவங்களையாவது சரியா பயன்படுத்தி இருக்காங்களா?வேதாள ராணின்னு ஓவர் மேக் அப் பா ரைட்டு.. இங்கயும் அங்கயும் பறந்து பறந்து பேசறாங்க..அறிமுகமே ஆர்ப்பாட்டமா இருக்கு..ஆனா இந்த DSP..? விஜய் ரசிகர்கள் மொத்த வேண்டியது இவரைத்தான் ..குஷி படத்தில் விவேக் சொல்ற மாதிரி டப்டும்.. டிப் டப் டம் இதையே மாத்தி மாத்திப் போடுன்னு BGM ..சரி கிளைமாக்ஸ் ல அவங்க சண்டை போடுறப்ப செமையா இருந்துச்சு..ஆனா படக்குன்னு முடிச்சுட்டாங்க..சுதீப் கூட சரியா சண்டை போடாம பொசுக்குன்னு போயிடறாரு.. விக்ரம் படம் பார்த்து இருக்கீங்களா..அது fantasy படம் லாம் இல்ல..ஆனா ஒரு எதிரி கோட்டைக்குள்ளே நுழையறப்ப BGM எப்படி இருக்கணும் சுவராசியம் எப்படி இருக்கணும்.. காட்சிகள் எப்படி இருக்கணும் என்பதற்கான உதாரணம் அது..இங்க எல்லாம் சர்வ சாதாரணமா நடக்குது..ஸ்ரீதேவி மந்திரக் கோலை வச்சு தடவித்தடவி கொடுக்கறாங்க சுருதிக்கு..ஒரு மாற்றமும் இல்ல..நல்லாத் தூங்கும்மான்னு தட்டிக் கொடுத்திருப்பாங்க போல..
எவ்வளவுக்கு எவ்வளவு வில்லன் கொடூரமாக ஹீரோவுக்கு tough கொடுக்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு ஹீரோவுக்கு இமேஜ் ஏறும்..இதைச் சரியாக புரிந்தவர் MGR ..போராடி ஜெயிக்கிறப்ப ஆடியன்ஸ்க்கு நல்லவன் ஜெயிச்சான் என்ற ஆசுவாசமும் தன் ஹீரோ ஜெயிச்சுட்டான் என்ற சந்தோசமும் வரும்..அதான் படத்தோட முழு வெற்றி..
அப்புறம் ஏதோ சிஜி சிஜி ன்னாய்ங்க.. எதுல அது அழகா கொண்டு வரப்பட்டிருக்குன்னு கண்டுபிடிச்சு யாராவது சொல்லுங்க..ஒருவேளை எனக்குத்தான் தெரியல போல. கிளி பேசுவது ஆமை பேசுவது லாம் விஜய் ரசிகர்களுக்குப் புதுசா இருக்கலாம்..ஆனா இன்னிக்கு சுட்டி டிவி போகோ டிவி ல இதை விட இன்னும் பெட்டரா இருக்கும்..கல் பாலமாக நீள்வது ,ஆமை தவிர வேற என்ன இருக்கு..இதுல ஷங்கர் மாதிரி பிரம்மாண்டம்ன்னு சிலாகிக்கறாங்க.

விஜய் சிம்புதேவனை முழுசா நம்பி மோசம் போயிருக்கார்..அதாவது சூர்யா அஞ்சான்,மாஸ் ல மோசம் போன மாதிரி..அஜித் ரெட்,ஆழ்வார் ல மோசம் போன மாதிரி. இப்படித்தான் கண்ணுக்குள் நிலவு படத்தில் பாசில் ஏமாத்தினார்.. விஜய் இப்படி வித்தியாசமா பண்ண நினைக்கறது தவறு இல்ல அதற்குத் தக்க கதை திரைக்கதை கேட்டுக் கொள்ள வேண்டும்..பழைய படங்களில் சிறுத்தை ,புலி கூட வரும் சண்டைகள் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்திருப்பார் தானே..ஒரு சின்ன ஒப்பீடு கூட மனசில் செய்யவில்லையா ?

புலித்தேவன் என்றகேரக்டருக்கு நீளமா முடி வச்சது கூட சரிதான்..ஆனா முதல் காட்சியில் வீரன். அடுத்த காட்சியில் மூஞ்சியில புலி வேஷம் போட்டுட்டு , வில்லன் சொன்னதைச் செஞ்சாலுமே கூட, எப்படி அவன் தன் கிட்ட கொடுத்த வாக்கை காப்பாத்துவான் என்பதைக் கூட யோசிக்காத அரசனா?விஷத்தைக் கொடுக்கவும் வாங்கி குடிக்கிறார்.புலின்னு சொல்லி பூனையாக்கி வச்சிருக்காங்க..இதுக்கு கட்டப்பா பாகுபலிய கொன்னது மாதிரி கூட கொன்னு போட்டிருந்தா கெத்தா இருந்திருக்கும் ல(இதுல கதை சொல்றப்பவும் வஞ்சகத்தால் இறந்ததா தான் சொல்றார் சங்கிலி )

..என் அண்ணா பையன் தீவிர விஜய் ரசிகன் ..ஒருவேளை நமக்குத்தான் இப்படித் தோனுதோ என மெதுவாக அவனிடம் விசாரித்தேன்..சோட்டாபீம் மாதிரி இருக்கு என்றான்.ஆக வெறும் அனிமேஷன் ல மட்டுமே எடுக்க வேண்டிய படத்தை இப்படி விஜய வான்னு கூப்பிட்டு இப்ப எறி இப்ப எறி ன்னு சொல்லிருக்கார் சிம்புதேவன்..இதுல ஸ்ரீதேவியை என்ன சொல்லிக் கூட்டியாந்தாங்களோ..அட்லீஸ்ட் கிளைமாக்ஸ் லாவது சண்டைக் காட்சியை பொசுக்குன்னு முடிக்காம இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்..அவங்க பேர் யவனராணி ..சாண்டில்யன் யவனராணி எவ்வளவு கெத்தானவள் ன்னு படிச்சுத் தெரிஞ்சுக்கங்க டே..

மன்னராக முடி சூட்டவும் பழைய சக்கரவர்த்தித் திருமகள் படத்தில் MGR பேசுற வசனத்தை பட்டி டிங்கரிங் பண்ணி பேச விட்டிருக்காங்க விஜய..படத்தில் வசனம் கூடவா இவ்வளவு மொக்கையாக இருக்கும்..விஜய்க்கு இதுக்கு முந்தி வேறெந்த படத்திலும் இது மாதிரி மொக்கையா இருந்ததில்லை..சுதீப் தன்னைத் தளபதி என்றதும் விஜய்கிட்ட செம பன்ச் எதிர்பார்த்தேன்..ஏமாற்றமே..அதே போல இங்க துரோகம் முளைக்காது என்பதும் ..ஏற்கனவே துரோகம் முளைச்சு தான சுதீப் நிக்கிறார்..அப்ப இனி முளைக்கக் கூடாதுன்னு தான வரணும்..தமிழ்ல நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு :-)) விஜயோட அரசியல் ஆசையை வெளிப்படுத்துவது போல் இருந்தது அந்த வசனங்கள்..வருங்கால இளைஞர்கள் இந்தக் குழந்தைகள் என்பதாலா?

அப்புறம் ஆனா ஊனா சுறாவ இழுத்துடறாங்க..சுறா,ஜனா,வில்லு ஆழ்வார் லாம் கடைஞ்செடுத்த மோசமான படங்களுக்கு உதாரணம்..ஆனா நல்ல படங்களுக்கான உதாரணங்களை ,இதை வச்சே எடை போடாதீங்க..அது தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதும் கூட..
அடுத்து இது மாதிரி விஜய் தேர்ந்தெடுக்காம போயிடக் கூடாது..சரியாக தேர்ந்தெடுக்கணும் என்பதே என் ஆசை..தனக்குப் பிடிச்ச ஹீரோ நடிச்ச படம் என்பதற்காக தம் கட்டுவதை விட ,சீர் தூக்கிப் பார்க்கலாம்..அடுத்தாவது அவங்க சரியா செய்ய வழிவகுக்கும்..
துப்பாக்கி மாதிரி செம கெத்து படம் விஜய்க்கு அவர் கேரியரில் மிக முக்கியமானது..இனி அடுத்த ஹிட்க்கும் ARMமிடமே சரண் புகல்க..!

Reply · Report Post