@Sathishvasan


சதீஷ்வாசன்:

மிகவும் நல்லவர், பிறர் மனம் கோணாது பேசுபவர், பழகுதற்கு இனியவர், எப்போதும் மென்மையாகவே பேசுபவர் என்றெல்லாம் ஒருவர் மறைந்தபின் பொதுவாக நாம் உபயோகிக்கும் அனைத்து வார்த்தைகளுக்கும் சத்தியமான தகுதி கொண்டவர் @sathishvasan என்கிற நண்பர் ஸ்ரீநிவாசன்.

நிறைய வாசிப்பவர். அதை என்றும் பிரஸ்தாபம் செய்யாது இருப்பவர். தன்னைப் பற்றிய சுயபுராணம் ஏதும் பாடமாட்டார். நல்ல விஷயம் இணையத்தில் படித்தால் அதை உடனே பகிர்பவர் என சோஷியல் மீடியாவில் செத்துப்போன பல நல்ல சுபாவங்களை/பழக்கங்களைக் கொண்டவர்.

தனக்கென சின்னதாக ஒரு டீசன்ட் சர்க்கிள் அதற்குள்ளே ஒரு dignity'யுடன் கடைசிவரை பழகியவர் என்று இப்போது அவருக்காய் வருத்தம் தெரிவித்து வரையப்படும் ட்வீட்டுகள் சொல்கின்றன.

இரண்டு வருடம் முன் அவர் இந்தியா வந்திருந்தபோது காபி சாப்பிடவென காசி தியேட்டர் அருகே சரவணபவனில் சந்தித்தோம். அதுதான் அவரை நான் முதலில் சந்தித்தது. அடுத்த இரண்டொரு நாளில் வேளச்சேரியில் ராஜேஷ் பத்மன், கோகுல், ஜேஎம்ஆர், 2nrc என பிற நண்பர்களுடன் அடுத்தொரு சந்திப்பு. அதுவே எங்கள் கடைசி சந்திப்பும்.

இணையத்தில் காட்டிய DP முகத்திற்கும் நேரில் பார்த்த நிஜ முகத்திற்கும் வித்தியாசம் இருந்தாலும்; பழகிய முறையில் நேரிலும் இணையத்திலும் ஒரே முகம்தான் சதீஷ்வாசனுக்கு. அதே soft & gentle approach.

கடந்த 8'ஆம் தேதி விபத்தில் சிக்கியவர் 26'ஆம் தேதி இறந்தார் என்று அவர் மனைவியிடமிருந்து டிஎம் வந்ததாக நண்பர்கள் சேதி பகிர்ந்துள்ளனர்.

இப்படி சோஷியல் மீடியாவில் பழகிய நல்லவர்களின் பிரிவு வேளையில்தான் இங்கே நிலவும் கருத்துகள், காழ்ப்புகள், ஃபாலோ, அன்ஃபாலோ, ம்யூட், ப்ளாக் மற்றும் இன்னபிற விஷயங்களின் அபத்தங்கள் விளங்குகின்றன.

A true gentleman என்று திருமாறன் சொன்னதுதான் மிகச்சரி.

Yes!! We lost a true gentleman!!!

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

Reply · Report Post