விஜய் - அஜித் (பின்னிருக்கும் விளம்பர அரசியல்)


விஜய் - அஜித் தமிழ் சினிமாவின் இருபெரும் துருவங்கள் என்பது எல்லாரும் அறிந்ததே.. நா இங்க இதுல யாரு மாஸ் ஹீரோ யாரு டம்மி ஹீரோனு சொல்ல வரல.. இவங்க பேர வச்சி இணையம் மற்றும் சினிமாவில் என்னன்ன அரசியல் நடக்குதுனு எனக்கு தெரிஞ்சத வச்சி சொல்ல வந்துருக்கேன்..

சில வருடங்களுக்கு முன்னால ரஜினி பேர சொல்லி விளம்பரம் தேடிட்டு இருந்தவங்கல்லாம் இப்போ விஜய் - அஜித் ரசிகர்களை குறிவச்சிருக்காங்க.. ஏன்னா ரஜினி ரசிகர்களைவிட விஜய் - அஜித் ரசிகர்கள்தான் இணையங்களில் அதிகம்..

சமீபகாலமா பேய் படகதைகளா வந்திச்சி அதுல பலபடங்கள் நல்லாவே வியாபரம் ஈட்டிச்சி, இப்போ வந்துருக்கது தல-தளபதி சீசன், படத்துல கதையே இல்லனாலும் பரவாயில்ல இவங்கள பத்தின எதாவது சீன் வச்சிட்டா போதும் அவங்க ரசிகர்கள் போட்டிபோட்டு ட்ரெண்ட் பன்ன ஆரம்பிச்சிடுறாங்க, இப்போ அஜித் ரசிகர்களை குறிவச்சி விளம்பரம் பன்னுனா தல ரசிகர்கள் தலையில தூக்கிவச்சி கொண்டாடுவாங்க, விஜய் ரசிகர்கள் தூக்கி போட்டு மிதிப்பாங்க.. எப்டியோ அவங்களுக்கு தேவையான விளம்பரம் நல்லாவே கிடைச்சிடும்.. அவங்க போட்ட பணத்த சுலபமா அள்ளிடுவாங்க..

இப்போல்லாம் ஒரு பட வெற்றியை தீர்மானிப்பது டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸப் தான், இவை அனைத்தையும் கட்டி அரசாளுவதே விஜய் - அஜித் ரசிகர்கள்தான்.. அதானால்தான் இவர்கள் மீதி குறிவைக்க படுகிறது.

அதேகதைதான் இணையத்துலயும் நடக்குது. ஒருத்தங்க டிவிட்டர்ல பிரபலமாக விஜய் - அஜித் என எந்த பக்கமும் சாயாம நடுநிலையா இருந்தாங்கன்னா அவங்க பிரபலமாக ரொம்ப காலமாகும், அதே எதாவது ஒரு பக்கம் சாய்ந்து எதிரணிபற்றி கேலி கிண்டல் பேச ஆரம்பிச்சா சுலபமா பிரபலமாயிடலாம்.. இப்டிபட்ட பல முகங்களும் டுவிட்டர்ல இருக்குது.

அடுத்ததா சினி வெப்சைட்க்கள்.. இவங்களுக்கு தேவை நம்ம அவங்க வெப்சைட்ட போய் எட்டி பாக்கனும் அவ்ளோதான் அதுக்காக அர்வமூட்டுறபோல ஹெட்டிங்க போட்டு நம்ம இழுப்பாங்க. இதுக்காகவே தனி டீம் வச்சிருப்பாங்க போல, சிலநாள் நாள் முன்ன ஒரு வைப்சைட் 'அஜித் தயாரிப்பில் விஜய் நடிக்கபோகிறார்'னு பிபி எதிற அளவு ஆர்வமூட்டி ஹெட்டிங் போட்ருந்தாங்க, உள்ள போய் பாத்தா அந்த நியூஸ் அஞ்சி நயா பைசாக்கு தேறாது.

இப்போ அவங்களுக்கு சத்து டானிக்கா டிவிட்டர்ல Poll Option வேற வந்துடுச்சு, கேள்வியே படாத புதுபுது சினி பேஜ்கள்கூட அவங்க விளம்பரத்துக்காக 'இதுல யார் மாஸ்...? விஜய்யா..? அஜித்தா..?' னு கேள்விய கேட்டு நம்மள ஊறுகாவா யூஸ் பன்னிட்டு இருக்காங்க..


இந்த டூலா எழுதுன காரணம், உங்க அபிமான நடிகர் பற்றிய நியூஸ் வந்துச்சுனா அதுக்கு பின்புலமா இருக்குற இப்படிபட்ட விசயத்த ஆராய்ந்துட்டு கம்பு சுத்துங்க. எதிரணி பற்றி கேலி கிண்டல் பன்னுங்க தப்பில்லை அது மற்றவர்கள் ரசிக்கும்படியாகவும் எல்லைமீறாதவரை இருக்குமாயின் இன்னும் நன்று.

தான் பின்பற்றும் ஹீரோ ரொம்ப நல்லவர் நல்ல குணம் கொண்டவர் அவர் வழியைத்தான் நான் பின்பற்றுறேனு சொல்லிக்கிறாங்க, ஆனா ரசிகர் சண்டைனு வரும்போது மட்டும் மாறி மாறி பிறர் குடும்பத்தை பற்றி இழிவா கொச்சைவார்த்தை பேசி தாக்கிக்கிறாங்க, இதற்கான காரணம் மட்டும் ஏனோ புரியா புதிர்...!
முக்கியமா சமீபகாலமா வாட்ஸப்ல உலாவுர தல ரசிகை பேசிய ஆடிய பத்திலாம் என்ன கருத்து சொல்லனே தெரியல, சிம்ளி வேஸ்ட்...

நான் நடுநிலைவாதியல்ல விஜய் ரசிகன்தான், ஆனா முடிந்தவரை நடுநிலையோடு எழுதியிருக்கேனு நம்புறேன்..
நன்றி...!
♡ இளைய தோழன் ®™ ♡ - @DineshRainaa

Reply · Report Post