குழந்தைகளை சமையலறைக்குள் அனுமதிக்கும் தாய்மார்கள் கவனத்திற்கு


தோழியின் பக்கத்து வீட்டில் நடந்த ஒரு கோர சம்பவம் இது! 4 வயது சிறுவன் வீட்டில் துருதுருவென்று ஏதாவது செய்துகொண்டிருப்பான்! சமையலறையிலும் சென்று விளையாடுவது வழக்கம். இதனை உறவினர் கண்டித்தாலும் தாய் கண்டிக்கவில்லை. ஒரு நாள் எண்ணை சட்டியில் அப்பளம் பொறித்து கொண்டிருக்கையில் வழக்கம் போல் சமையலறை வந்த சிறுவன் விளையாடி கொண்டிருக்கையில் கை எண்ணை சட்டியில் பட்டு சட்டி கவிழ்ந்தது இதில் கொதித்துகொண்டிருந்த எண்ணை அவன் மீது முழுவதுமாக கொட்டியது. தடுக்க சென்ற தாய்க்கும் இடது கை முழுக்க எண்ணை கொட்டியது. ஆனால் சிறுவனுக்கு மூக்கிற்கு கீழ் உள்ள அனைத்து இடத்திலும் எண்ணை கொட்டியது. வலி தாங்க முடியாமல் அச்சிறுவன் உள்ளங்கையால் முகத்தை அழுத்தி தடவி இருக்கிறான். இதில் அவனது தோல் கையோடு வந்துள்ளது. உடம்பில் 80% தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இப்பொழுது பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய முடிவெடுத்துள்ளனர். தாய்மார்களே குழந்தையின் சுட்டித்தனத்தை ரசிப்பதும் ஆதரிப்பதும் தவறில்லை ஆனால் அனைத்திற்கும் ஒரு இடம் பொருள் ஏவல் உள்ளது! இந்த பதிவினை பகிர்ந்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்!

நன்றி!

Reply · Report Post