காதலென்றால் காமமா?!


தெய்வீகம், புனிதம், மனசு, உயிர்,
போன்ற அலங்கார வார்த்தைகள் தவிர்த்துப் பார்த்தால்,
என் காதலென்பது உன் மீது கொண்ட காமமே..!

ஆம், என் காதல் காமத்தில்தான் இருக்கிறது
முடிந்தால் கண்டு உணர்!

காமம் என்பது உடலுறவு அல்ல.... அது காமத்தின் சிறிய பகுதிதான்
பெரும்பகுதி உன்னை ஒட்டிக்கொண்டு இருப்பதில் இருக்கிறது
கட்டிப்பிடிப்பது மட்டுமல்ல உன் கரம்பிடிப்பது கூட காமமே

உயிர் போனால் உடல் குளிர்ந்து விடும் என்பது அறிவியல்,
உடலின் வெப்பம் தான் உயிரோடு இருப்பதின் அறிகுறி,
எனக்கு உயிர் ஒடும் உன் உடலின் வெப்பம் வேண்டும்...
உன் வாசனையோடு வரும் மூச்சுக்காற்று நுகரணும்,
முடி முதல் அடிவரை ஸ்பரிசிக்கனும்...,
துளி மிச்சமில்லாமல் பரஸ்பர உடல் அள்ளிப்பருகனும்
இதுவெல்லாம் கூட காமம் தான்

முத்தமிடனும்
புணரனும்
உச்சத்தில் உன் பெருமூச்சு கேட்கனும்
அதிரும் நிர்வாண உடலை அணைத்து அமைதிபடுத்த நீ வேண்டும்
இதுவும் காமம் தான்

குருதி கொட்டி குழந்தை பெற்று, ரத்தம் தோய்ந்து கிடக்கும் என்னை செவிலியரின் உதவி இன்றி சுத்தப்படுத்து,
அப்போது சொல் காதலென்றால் காமமா?!

வருடங்கள் கழிந்து ஒரு நாள் செத்துப்போவாய்,
உன்னை நீராட்டி இடுகாடு கொண்டுபோய் நானே தீயிட்டு கொளுத்த வேண்டும், அப்போதும் உன்னைக்கட்டிப்பிடிக்கத் தோன்றுமே
அன்று விடைபெறலாம் நீ ..!

Reply · Report Post