சாத்தானின் வேதம் - ஈழப்போரும் கலைஞரும்!


கலைஞர் என்ன செய்திருக்க முடியும், அவர் ஆட்சியயை விட்டு வந்திருந்தால் மட்டும் ஈழத்தில் போர் நின்றுருக்குமா !?

நிச்சயம் முடியாது...

என்ன சொன்னாலும் உங்கள நம்ப தமிழன்னு ஒரு இளிச்சவாய் இனம் இருக்கு, முடிந்தவரை அவர்களை அழிப்போம் அதான..

இல்ல உண்மையிலேயே இயன்றவரை முயன்றார்..ஆனா முடியல...

1. அப்புறம் ஏன் டெசொ நடத்துனாரு?

2. அப்புறம் ஏன் உண்ணவிரதம் இருந்தாரு?

3. ஏன் போர் நிறுத்தப்பட்டதுன்னு சொன்னாரு?

4. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் ஏன் இவரிடம் வந்து ஆலோசனை பெற்று போனாங்க ?

5. அத்தனை நாட்களாய் விடுதலை புலிகளுக்கு எதிராகவும், அவர்களுக்க எதிரான போர் சரியென சொல்லிவந்த தற்போதைய முதல்வர் ஜெயா அவர்கள் ஏப்ரல் 26, 2009 அன்று திடீரென தனித் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என அறிவிக்கிறார்.

6. இதை சற்றும் எதிர் பார்க்காத தமிழினத்தலைவர் கலைஞர் என்ன செய்வதென தெரியாமல், அதிரடியாக எதையாவது செய்தாக வேண்டுமென ஏப்ரல் 28, 2009 அன்று எந்த முன்னறிவிப்புமின்றி அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார்.

7. காலவரையற்ற உண்ணாவிரதம் மதியமே முடித்துக்கொள்ளப்படுகிறது, சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்திற்க்கான உறுதி அளித்தாதால், உண்ணாவிரதத்தை கைவிடுவதாக அறிவித்தார்.

8. போர் நிறுத்தப்பட்டதா ? பிறகு ஏன் நின்றதாக சொல்லவேண்டும் ?
"மழை நின்றும் தூவானம் போல, போர் முடிந்தும் அங்கங்கே குண்டு வீசப்படுகிறது" என சொன்னது யார்?

9. மே 1, 2009 அன்று இலங்கை செல்லும் முன்பாக எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் குழு இவரை வந்து சந்தித்து செல்கின்றனர்.

10. மே 20, 2009 இலங்கையிலிருந்து திரும்பி வந்த எம்.கே.நாராயணன் இலங்கை - போர் நிலைமையை கருணாநிதியிடம் விவரிக்கிறார். இவரும் ஆலோசனைகளை வழங்குகிறார்.

11. மே 23, 2009 மீண்டும் தேபாஆ. எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் இவரை சந்தித்து ஆலோசனை பெறுகின்றனர்.

12. மத்தியில் தேர்தல் - மே 13, 2009 அன்று தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது.

13. மே 16, 2009 அன்று ஓட்டு எண்ணப்பட்டு முடிவு வெளியாகின்றது. திமுக பங்கு பெற்ற UPA பெரும்பாண்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.

14. மே 17, 2009 இலங்கை ராணுவம் மூர்கத்ததனமாக தாக்குதல் நடத்துகிறது,
முள்ளிவாய்க்கால் படுகொலை நடந்தேறுகிறது.

15. மே 18, 2009 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொள்ளப்பட்டதாகவும், போர் முடிவுற்றதாகவும் இலங்கை ராணுவம் அறிவிக்கின்றது.

16. இந்த தேதிகளை பார்த்தாலே இது எல்லாமே திட்டமிட்டு நிகழ்தப்பட்டதென தெளிவாக தெரியும்.

17. தேர்தலுக்கு முன்பாக இலங்கை விஷயத்தில் காங்கிரஸின் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் அவர்களை கை விடுவதை தவிர வேறு வழியில்லையென சொன்னவர்.

18. தேர்தலுக்குப்பிறகு 8 அமைச்சர் பதவியை கேட்டாரு! என்ன சொல்லி கேட்டாரு, அணு ஆயுத ஒப்பந்தம் காரணமா எல்லா கட்சியும் விட்டுப்போனாலும் திமுக இருந்ததா சொன்னாரு!

19. முடிவா 7 (3+4) அமைச்சர் பதிவிகளை வாங்குனாரு. 3 காபினேட் அமைச்சர்கள் யாரு? தயாநிதி மாறன், அ.ராசா மற்றும் அண்ணன் அழகிரி.

20. இங்கே மைனாரிட்டி ஆட்சிக்கு காங்கிரஸின் தயவு தேவைப்பட்டது, அப்போதெல்லாம் இலங்கை பிரச்சனையில் மிகுந்த அக்கரை உள்ளது போல காட்டிக்கொள்ளவே தேசிய பாதுகாப்பு ஆலோசகரை அழைத்து பேசிக்கொண்டார்.

21. மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட அவர் மாறவில்லை, அக்டோபர் 17, 2012 டி.ஆர்.பாலு, அ,ராசா 2ஜி விவகாரதுக்காக பதவி விலக வைக்கப்படுகின்றனர்.

22. அதுவரை மகள் கனிமொழிக்காக 2ஜி விவகாரத்தில் போராடியவர், மார்ச் 19, 2013 அன்று இலங்கை விவகாரத்துக்காக காங்கிரசை கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுகிறார்.

23. 2002 ல் இருந்தே இலங்கையில் போர் மீண்டும் தொடங்கி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது. 1999ல இருந்து (வெவ்வேறு) மத்தியில் பங்குபெற்றுவரும் கட்சி அத்தனை நாளாய் என்ன செய்துகொண்டிருந்தது.

24. பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டபோது என்ன செய்துகொண்டிருந்தார்?

25. 2009ல் நடக்காத விஷயம் 2012ல் நடந்துவிட்டதா?

26. பதவி சுகம் கிடைக்கும்வரை அனுபவித்துவிட்டு மகள், பேரன், கட்சியை காப்பாற்ற காங்கிரஸுடன் உறவாடினார். இனி வேலைக்கு ஆகாது என தெரிந்தவுடன் தமிழனத்தலைவர் ஆகிவிட்டார்.

27. காமன் வெல்த் விளையாட்டுப்போட்டி பரிசளிப்பு விழா நடந்தது, அதுக்கு ராஜ பக்சே விருந்தினரா வந்தாரு, அதே சமயம் மனித உரிமை ஆணையத்தில் விசாரணை நடந்தது, அவர் இந்தியாவுக்கு ஏன் வரார்னு கருணாநிதி கேட்டாரா? பதவி விலகுனாரா?

28. போபாலுக்கு புத்தர் சிலை நிறுவ ராஜ பக்சே வந்தப்ப என்ன செய்தாரு?

29. ஐ.நா மன்றத்தில ராஜ பக்சே பேசுறாருன்னதும் கருப்பு சட்டை அணிந்து, கட்சி அலுவலகத்தில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்ப காட்டுறாரு,அது எப்ப பதவியில் இல்லாத போது!

30. 2013 தேர்தலில் மதவாத கட்சி என்பதால் பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையாம், 1999ல் பங்குபெறும்போது அந்த அறிவு எங்க போச்சு?

31. 2013 மத்திய தேர்தலில் இழப்பு நிச்ச்யம், அதுவும் காங்கிரசுடன் இருந்தால் கேவலப்படுவோமென தெரிந்தே காங்கிரசை கழட்டிவிட்டார்.

32. ஆட்சியிலிருந்த காலத்தில் மயக்கத்திலிருந்துவிட்டு, பதவி இல்லாதபோது தனி தமிழீத்திற்க்கு வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென கேட்க்கிறார்.

33. இறுதிப்போர் நடந்தபோது ஈழம் இனி சாத்தியமில்லை, மத்திய அரசின் நிலைப்பாடுதான் மாநில அரசின் நிலைப்பாடு என்றார். இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்தலும், மாநில சுயாட்சியும் வேண்டும் என்பது தான் தமது கொள்கையாக சொன்னார்.

34. தற்போது ஈழத்தை அடையும்வரை ஓயமாட்டேன் என்கிறார்.

35. சென்னையில் திருமாவளவன் ஈழ ஆதரவு மாநாடு நடத்தியபோது விளம்பரங்களில் "ஈழம்" என்ற வார்த்தையை காவல் துறைகொண்டு அழித்தவர் தான் கருணாநிதி.

36. ஜுலை 12, 2010 ல் ஈழ ஆதரவாக பேசியதற்க்காக சீமானை கைது செய்தது யாருடைய அரசு?!

37. இலங்கை தமிழர் படுகொலை கானொளியை கண்கொண்டு பார்க்கமுடியவில்லையென கண்ணீர் மல்க முரசொலியில் எழுதுகிறார், கானொளி சிடியை பெரியார் திராவிடர் கழகம் வீடுவீடாக அளித்தபோது, அவர்களை தேடிப்பிடித்து கைது செய்தது யாருடைய அரசு?!

38. முத்துக்குமார் தன்னை மாய்த்துக்கொண்டபோது, ஒரு இரங்கலாவது தெரிவித்தாரா தமிழினத்தலைவர் ?

39. இரங்கலுக்கு மாணவர் திரண்டுவிடக்கூடாது என்பதற்க்காக விடுதிகளை மூட உத்தரவித்து எதற்க்காக?

40. பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் தியாகம் வீணாகாது என இப்போது சொல்லும் கருணாநிதி 2009ல் என்ன செய்துகொண்டிருந்தார்?

41. அத்தனை டிவி சானல்கள் சொந்தமாக வைத்திருப்பவர் ஒரு முறையாவது இலங்கை தமிழர் படுகொலை கானொளியை ஒளிபரப்பினாரா? அல்லது தனக்கு சொந்தமான நாளெடுகளில் வெளியிட்டாரா? ஏன் செய்யவில்லை?

42. போர் முடிந்ததும், தமிழகத்தில் மாணவர்கள், பாதிப்படைந்தவர்களின் மருத்துவ உதவிக்காக மருந்து சேகரித்தார்களே! அவர்களை கைது செய்தது யாருடைய அரசு? சிங்களர்கள் கோவப்படும்படி நடந்துக்கொள்ளக்கூடாது என கண்டித்தது யார்?

இப்படி மாற்றி மாற்றி பேசுவது ஏனோ? பதவிக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா?

இதுவே எனது கடைசித்தேர்தல் என பலத்தேர்தல்களை கடந்து வந்துட்டாரு, இந்த முறையும் தமிழினத்தலைவராகத் தன்னை காட்டிக்கொள்வார்.
ஈழப்போரில் தலைவர் எதுவும் செய்திருக்க முடியாது, பலிக்கடா ஆக்கப்பட்டார்னு அப்பாவியா சொல்லும் உபிக்களுக்காகவே இந்த பதிவு.

அது வெளி நாட்டு விஷயம் நாம ஏன் தலையிடனும்னு நீங்க இப்ப கேட்கலாம், அதை உங்க தலைவரை சொல்லச் சொல்லுங்க பார்ப்போம்.

இவங்க சொல்ற எல்லாத்தையும் நாம கேட்டுக்கிட்டு ஜிங்ஜாங் அடிக்கனும், இதுல அடுத்தக்கட்சி ஆட்க்களை அடிமைகள்னு விமர்சிக்கறாங்க, நீங்க என்ன இதுவரை உங்க த்லைமையை எதிர்த்து கேட்டிருக்கீங்க? சுய சிந்தனை இல்லாதவர்கள், பதவி வெறி பிடித்தவர்கள் நாங்கள் பெரியார் வழி வந்தவர்கள்னு நீங்களே சொல்லிக்காதீங்க... கேவலம்.

. ............... தொடரும்

- ஆயிரத்தில் ஒருவன்.


பின் குறிப்பு :
இந்த பதிவு திமுகவின் இலங்கை போர் செயல்பாடுகள் பற்றியே, இது தொடர்பான மறுப்பு கருத்துக்கள் வரவேற்க்கப்படுகினறன.

மற்ற யாரும் தன்னைத்தானே தமிழனித் தலைவன் என சொல்லிக்கொள்ளவில்லை, கட்டுமரம் கடலில் தூக்கிப்போடுங்கள் உங்களுக்காக மிதப்பேன் என சொல்லவில்லை.

இதுல இன்னும் டெசோ, லட்சத்தீவு, நளினி, முருகன், பேரறிவாளன் கதையெல்லாம் வேற இருக்கு!

அதிமுக, மதிமுக மற்ற தமிழ் தேசிய கட்சிகளைப்பற்றி நீங்களே பதியலாம், அதை வரவேற்க்கிறேன்.
நான் இதை தான் எழுதனும்னு? ஏன் அதை எழுதக்கூடதுன்னு எனக்கு அட்வைஸ் செய்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாமென வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.

Reply · Report Post