ராஜீவ் கொலையாளிகள்


வட இந்தியர்களின் பார்வையில் அந்த ஏழு பேர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களும் ராஜீவ் கொலையாளிகள் தான்...

நிற்க, இது சீரியஸ் பதிவல்ல... தொடர்க...

நான் காலேஜ் முடிச்சதும், அதாவது once upon a time long long ago... நானும் என் ஃப்ரெண்டும் Faridabad க்கு IOC Interview -க்கு போயிருந்தோம்... முடிச்சதும் பக்கத்துல தானே இருக்குன்னு டெல்லி போனோம்

முதல் நாள் ஆக்ரா, மதுராலாம் முடிச்சிட்டு அடுத்த நாள் ஷாபிங். முதல்ல நாங்க தங்கியிருந்த கரோல் பாக்ல இருந்தே ஆரம்பிச்சோம்... நிறைய ரோட்டோர கடைகள் இருந்தது... அதலாம் முடிச்சிட்டு ஒரு சின்ன ஷோரூம் மாதிரி இருந்த கடைக்குள்ள போனோம்... அது ஒரு சர்தார்ஜி நடத்தற கடை. எங்கள பார்த்ததும் பயங்கர வரவேற்பு... நம்ம மூஞ்ச பார்த்ததுமே தமிழன்னு கண்டுபுடிச்சிட்டான்... you madrasse.. i like idly, vadai ன்னு பாச மழை பொழிஞ்சான்... சரி நாங்களும் அவன்க்கிட்ட பேசிக்கிட்டே 6 T-Shirt எடுத்தோம்...செலக்ட் பண்ணி முடிச்சிட்டு எவ்ளோன்னு கேட்டா 1200 சொன்னான்....

ஏற்கனவே நாங்க போகும் போதே நண்பர்கள் “டெல்லில எல்லாம் ஃப்ராடு பசங்க... எது சொன்னாலும் பாதி ரேட்டுக்கு கேளுங்க”ன்னு சொல்லி அனுப்பியிருந்தாங்க

என் கூட வந்த ப்ரெண்டு சாதாரணமாவே பேரம் பேசுவான்.. இந்த மாதிரி முன்னெச்சரிக்கை வேற இருக்கவே... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம 300 க்கு தருவீயான்னு கேட்டுட்டான்... அவ்ளோ தான்... சர்தார்ஜிக்கு வந்துச்சே கோவம்... கன்னாப்பின்னான்னு ஹிந்தில திட்ட ஆரம்பிச்சிட்டான்... நல்ல வேளை எங்களுக்கு ஹிந்தி தெரியாது

ஒரு கட்டத்துல ரொம்ப உக்கிரமாகி “You Killed Rajiv Gandhi" ன்னு கத்த ஆரம்பிச்சிட்டான்... எனக்கு அல்லுவிட்டுடுச்சு... மச்சி இவனுக கத்தி வேற வச்சிருப்பானுக எடுத்து சொருவிடப்போறான்... வா போயிடலாம்ன்னு குடு குடு கடை வாசலுக்கு வந்து...

"You killed Indragandhi" ன்னு சொல்லிட்டு திரும்பி பார்க்காம ஓடி வந்துட்டோம்...

Reply · Report Post