ரகுராம் ராஜனின் பங்கு.


ராஜனின் சில முக்கிய பங்களிப்புகள்:

1. ரிசர்வ் வங்கியை ஒரு அரசு அலுவலகத்திலிருந்து மிகக் சிறந்த தனியார் நிறுவனமாக, ஒவ்வொரு மூத்த அதிகாரியும் தன் நடவடிக்கைக்குப் பொறுப்பு ஏற்பவராக மாற்றியது. பத்தரை மணிக்கு ஈயாடிக்கொண்டிருந்த பல்வேறு ரிசர்வ் வங்கி அலுவலகங்கள் ஒன்பது மணிக்கு சுறுசுறுப்பாக இயங்க வைத்தது.

2. வங்கிகள் Window Dressing எனப்படும் வருடக்கடைசியில் Balance Sheet அளவை ஊதிப் பெருக்கி காட்டும் போக்கை மட்டுப்படுத்தியது.

3. வங்கிகள் Ever Greening எனும் வராக் கடனை, செயற்கையாக திரும்பப்பெற்று-மீண்டும் கடன் கொடுத்து - கடன் வாங்குபவர்கள் ஒழுங்காகப் பணம் செலுத்துவது போல் ஒரு பாவனை செய்து, தொடர்ந்து வராக் கடனுக்கு provision-write off செய்யாமல் தங்கள் loan portfolio ஆரோக்கியமான நிலையில் இருப்பது போல் காட்டிக் கொண்டது பல்வேறு வருடங்களாக தொடர்ந்தது. மால்யா எல்லாம் இதன் விளைவுகள் தாம். ராஜன் தன் சக அதிகாரிகள் மூலம் இதனை கடுமையாகக் கண்டித்து, வங்கிகளை வராக் கடனை நஷ்டம் என அறிவிக்கச் செய்தது. இது நோய் கண்டபோது மருந்து உட்கொள்வது போல் தான். இப்போது கசந்தாலும், நீண்ட காலத்தில் நம் வங்கிகள் ஆரோக்கியமாக இருக்கும்.

4. பண வீக்கத்தைக் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருத்தியது. பணவீக்கம் இவர் வந்த போது CPI 9.78%. தற்போது 5.76%. முந்தைய WPI System சரியானதல்ல; உலகம் முழுதும் CPI பயன்படுத்துவதால் அதனை அமல் படுத்தியது என்று குறிப்பிடத்தக்க சாதனை

வளர்ச்சி வேண்டும் தான். ஆனால் அது supply side bottlenecks சரி செய்யாப்படாத நிலையில் பணவீக்கத்திலேயே முடியும். RBI can only take monetary measures. It can control money supply, liquidity, and interest rates. But fiscal measures like improving supply is in the realm of Government. Infrastructure has been in doldrums for so long. Coal is produced. But no good transport to take it to thermal stations. Bad roads. Power demand far more than supply. இது பெரிய டாபிக்.

5. இந்திய ரூபாய் - இவர் வந்த போது தினமும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருந்தது. இவருக்கு முன் இருந்த சுப்பாராவ் "ரிசர்வ் வங்கியால் எதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது" என்று சொன்னதுமே ரூபாய் மேலும் ஆட்டம் கண்டது. ராஜன் முதலில் FCNR B scheme மூலம் வங்கிகள் வெளிநாட்டிலிருந்து அந்நிய செலாவணி பெற்று, அதனை குறைந்த வட்டியில் ரிசர்வ் வங்கியிடம் இந்திய ரூபாயாக மாற்றிக்கொள்ளும் திட்டம் கொண்டு வந்தவுடன், அந்நிய செலாவணி பெருமளவில் இந்தியாவுக்கு வந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கிறது. அவர் பொறுப்பு ஏற்ற போது ரூபாயின் மதிப்பு டாலருக்கு 67.02. மூன்று வருடங்களுக்குப் பிறகு இன்று 67.16. வேறு எந்த ரிசர்வ் வங்கி ஆளுநர் பொறுப்பிலும் ரூபாய் இப்படி ஸ்திரமாக இருந்ததில்லை. ஒரு புறம் எண்ணெய் விலை குறைவால் இறக்குமதி சார்ந்த அந்நிய செலாவணி தேவை குறைவு; மறுபுறம் சைனா தொடர்ந்து தனது யுவானின் மதிப்பை குறைத்ததால் ரூபாயின் மதிப்பையும் குறைக்க வேண்டிய நிலை (இல்லையேல் நம் ஏற்றுமதி பாதிக்கப்படும்). He did a fabulous job in currency management.

6. அந்நிய செலாவணி இருப்பு மிக அதிக அளவில் இருப்பது. 360 பில்லியன். அவர் வந்த போது 275 பில்லியன்.

7. ரிசர்வ் வங்கியின் autonomy என்னும் சுதந்திரத்தை நிலை நாட்டியது. மத்திய அரசு தொடர்ந்து பலவிதங்களில் ரிசர்வ் வங்கியின் விவகாரங்களில், அதிகாரத்தை பகிர்ப்பதில் நாட்டம் காட்டியது. வட்டி விகிதம் குறைத்தல், வங்கிகளின் வராக் கடனை எப்படி காட்டுவது என்று அறிவுரை, பல்வேறு Regulators போல நீயும் ஒருவன்; சுண்டைக்காய் என்று தொடர்ந்து எள்ளல். இவைகளுக்கு இடையிலும் ராஜன் தொடர்ந்து விடாப்பிடியாக ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தை காப்பாற்றியுள்ளார்.

8. மாறி வரும் தொழில் நுட்பங்களுக்கேற்ப சிறு வங்கிகள், பேமென்ட் வங்கிகள் என்று துவங்க அனுமதி என்று ஒரு நவீன மத்திய வங்கியாக இருப்பது.

எந்த monetary authority ஆக இருக்கட்டும். US FED, BoJ, EU, BoE, IMF, WB என்று முன்னணி பொருளாதார நிபுணர்கள் பெரிதும் மதிக்கும் சிறந்த ஒருவரை கேவலம் அரசியல் காரணங்களுக்காக அவமதிக்காதீர்கள்.

-Anujanya

Reply · Report Post