பேலியோ என்பது "எடைக்குறைப்புக்கான தற்காலிக தீர்வு டயட்" என்ற ரீதியில் சில ட்வீட்கள்/பதிவுகள் கண்ணில் பட்டன.

பேலியோ என்பது ஒரு டயட் மட்டுமல்ல. வாழ்வுமுறை மாற்றம்.
எடைக்குறைப்பு என்பது பேலியோ மூலம் கிடைக்கும் ஒரு எக்ஸ்க்டிரா நன்மை மட்டுமே. மற்றபடி எடைக்குறைப்பு நோக்கமோ, தேவையோ இல்லாதவர்கள் கூட இதைப் பின்பற்றலாம். நோயற்ற, மருந்துகளின் தேவையற்ற, ஆரோக்கியமான உடல்நலனில் அக்கறை உடையவர்கள் சற்று "ஓபன் மைன்ட்"டோடு, இதைப் பற்றி அறிந்துகொள்ள முயலுங்கள். "ஆரோக்கியம் & நல்வாழ்வு" பேஸ்புக் குழுமத்தின் "Pinned" பதிவுகளை வாசியுங்கள். கூகிள் செய்து பாருங்கள்.

பேலியோ உடற்பயிற்சிக்கு எதிரானது அல்ல. செல்வன் (@holyox) பெங்களூர் பேலியோ மீட்டில் quote செய்தது போல, "YOU CAN NEVER OUT-BURN A BAD DIET".
அதாவது ஒரு டின் கோக்/பெப்சி குடித்து விட்டு, சில கிலோமீட்டர்கள் சைக்கிள் ஓட்டினால் அந்தக் கோக்/பெப்சி மூலம் உடல் பெற்ற கலோரிகளை எரித்து விடலாம்" என்பது மாதிரியான தவறான பரப்புரைகளுக்குத்தான் பேலியோ எதிரியே தவிர, உடற்பயிற்சிக்கு அல்ல.

அடுத்தது பேலியோ பணம் படைத்தவரகளுக்கு மட்டுமேயானது, அசைவர்களுக்கு மட்டும் தான் செய்யமுடிந்தது என்பவையெல்லாம் myths. பேலியோ பற்றி முழுமையாக அறிந்து கொண்டபிறகு, உங்கள் எண்ணங்கள் கண்டிப்பாக மாறலாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் இல்லையா?

முழுமையான பேலியோவுக்கு மாறுவதில் மனத்தடைகள் இருந்தாலும், குறைந்த பட்சம், அடிப்படை விஷயங்களாகப் பரிந்துரைக்கப்படும் சர்க்கரையைத் தவிர்ப்பது,refined,processed,junk உணவுகளை நிறுத்துவது முதலா விஷயங்களைக் கண்டிப்பாகக் கடைபிடியுங்கள். நமது/நமது குடும்பத்தினரின் ஆரோக்கியத்துக்கு நாமே பொறுப்பு.

Reply · Report Post