மைல்ஸ் டு கோ



ஆனந்த விகடனில் 25 வாரங்களாக வெளிவரும் இயக்குநர் வெற்றி மாறனின் மைல்ஸ் டு கோ தொடர் இந்த வாரத்துடன் முடிந்தது. அவர் அனுபவங்களை வாராவாரம் கேட்டு, அதை எழுத்தாக்கும் பணி எனக்கு கிடைத்தது என் பாக்கியம்தான். சமகாலத்தின் முக்கிய இயக்குநர், தனிப்பட்ட முறையில் என் ஃபேவரிட் ஒருவருடன் வாரம் இரண்டு நாட்கள் செலவிடும் வாய்ப்பு என்பது நிச்சயம் ஜாக் பாட் தான். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களை தாண்டியும் அவரைப் பற்றி பல விஷயங்கள் தெரிந்துக் கொண்டபோது அவர் மீதான பிரமிப்பு கூடிக்கொண்டே தான் போனது. அவர் ரசனையும், விருப்பங்களும் நிச்சயம் என்னை கொஞ்சம் Influence செய்திருக்கிறது. தொடரின் கடைசி அத்தியாயத்திற்காக அவரை சந்திக்கச் சென்றிருந்த போது “அடுத்த வாரம் போரடிக்குமே கார்க்கி” எனச் சிரித்தார். நானும் நிச்சயம் மிஸ் செய்வேன்.
பணி நிமித்தமாகவும் இது ஒரு பெரிய வாய்ப்பு. அதை நல்ல முறையில் முடித்திருக்கிறேன் என நம்புகிறேன். முழுக்க என் படைப்பு என சொல்ல முடியாது. ஆனால், என் எழுத்தில் வெளியாகவிருக்கும் முதல் புத்தகமாக இது இருக்கும்.

வாசித்த, கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றிகள்

மைல்ஸ் டு கோ.. எனக்கு நானே சொல்லிக்கிறேன் :)

Reply · Report Post