mohandoss

Yo! Em., · @mohandoss

27th Sep 2016 from TwitLonger

தவம்


March 26, 2015

ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்.

சுரா வரிகள் பற்றி எழுதியிருந்தேன்.

எவ்வளவு பெரிய வலி, நிச்சயமாய் கிரிக்கெட் என் மனதிற்கு எத்தனை நெருக்கமானது என்பதை இந்த நான்கு வருடங்களில் உணர்ந்திருக்கிறேன். நான் ஏமாற்றவில்லை, ஏமாற்றுவதில் ஒன்றுமே இல்லை. இது எனக்கான தண்டனை என்றே உணர்ந்தேன், செல்ஃப் எக்ஸைல் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள், அந்தச் சொல்லை நான் உபயோகிக்கக்கூடாது தான். நான் நினைத்திருந்தால் என்றைக்கோ தூக்கியெறிந்துவிட்டு கிரிக்கெட் பேசியிருக்கலாம் இணையத்தில். இல்லை என் மனதறிந்து நான் செய்யவே இல்லை நான்குவருடங்களில் ஒரு முறை ஸ்லிப் ஆகி கிரிக்கெட்டிற்குத் தொடர்புடைய - நேரடி இல்லை மறைமுக - பதிவிற்கு லைக் போட்டது தான் ஒரே முறை அதையும் அன்லைக் செய்துவிட்டேன் நிமிடங்களில். இணையத்தின் முகமூடி ரகசியங்கள் தெரியுமென்பதால், இன்னொரு கேரக்டரை உருவாக்குவதற்கும் எனக்கு காலம் பிடித்திருக்காது. ஆனால் செய்யவில்லை. முழு பைத்தியக்காரத்தனம் என்று இன்றும் நினைக்கிறேன். ஆனால் செல்லப் பைத்தியக்காரத்தனம். என்னுடைய வியர்ட் பதிவு கேட்டவர்கள்(ஆமாம் கேட்டவர்கள்) யாரும் இருக்கிறீர்களா என்று நினைவில் இல்லை, அதையெல்லாம் கேட்டவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது. கிரிக்கெட்டிற்காக நான் பகைத்துக்கொள்ளாதவர்களே கிடையாது. எனக்குள் இருக்கும் ஒரு அரக்கனுக்கு சோறு போட்டு வளர்த்துவந்தேன் நான்கு ஆண்டுகளாய். 2012ற்கும் இப்பொழுதைக்கும் வித்தியாசமே இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால் ஆஸ்திரேலிய அரகன்ஸ் 1% கூட குறையவில்லை, குறைந்தால் நீங்கள் ஆஸி சப்போர்ட்டர் இல்லை.

மிகவும் சப்டிலான ஒரு மாற்றம் என்னில் உருவானது, அது டென்டுல்கர் ரிட்டய்ர்மென்ட்-உடன் தொடர்புடையது. கடைசி கடைசியாய் இந்திய அணிக்கெதிராய் என்னிடம் இருந்த பர்ஸனலான ஒரு எதிர்ப்பு உணர்வு அறுந்தது. ஹாஹா. அது டென்டுல்கருடன் மட்டும் தொடர்புடையது இல்லை, டென்டுல்கர், விவிஎஸ், கங்குலி, டிராவிட், கும்ப்ளே(இதே வரிசையில், இன்னும் சில பேர்கள் சொல்லலாம் தேவையில்லை.) ஆனால் இது நான் டென்டுல்கர் ரிட்டையர் ஆகும் முன் உணர்ந்த விஷயம் இல்லை. பின்னர் தான். (மணிகண்டனுக்கு இதுதான் டென்டுல்கர் பற்றி நான் எழுத நினைத்தது, அவர் மீது நான் பட்ட எரிச்சல், ரிட்டையர் ஆகணும் என்று விரும்பியது எல்லாம் ரொம்ப பர்ஸனல் ஆனது, என்னால் புருனோவிற்கு நம்பர்களுடன் எழுதி நிரூபிக்க முடியாது. ஆனால் அதுதான் சச்சின், நீங்கள் சச்சனின் ரசிகராக இருந்தால், என்னிடம் இருந்த இந்த பர்ஸனல் காம்பிளிமென்ட் மட்டும் தான். எனக்கு நல்ல ரேட்டிங் தராத மேனேஜர், பின்னால் குற்றிய நண்பன் இவர்களிடன் இருந்ததைப் போன்ற ஒரு எரிச்சல், கோபம், எனக்கு சச்சின் மீது இருந்தது. அவ்வளவுதான்). ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வது இல்லை நான் உறுதிமொழி எடுத்தது. எனக்கு நினைவில் இருக்கிறது, மாற்றி எழுதிக்கூட இருக்கலாம், ஆனால் இந்தியா/சச்சின் உலகக்கோப்பை வென்றது என்னால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. அவ்வளவுதான், என் கைகளை லிட்டரலாக கட்டிக்கொண்டது இதற்காகத்தான்.

சச்சின் ரிட்டையர் ஆனதும் நான் அதுவரை கொஞ்சமாக உணர்ந்து வந்த ஒரு விஷயம் விஷ்வரூபமெடுத்தது. அது இந்திய கிரிக்கெட் அணியின் காதல். :) ஆமாம் நான் சிஎஸ்கேவின் ரசிகனாக உருவானதிலிருந்து டோனியின் மீதான என் காதல் கரை கொள்ளாமல் போனது. என்னுடைய ஆல்டைம் ஃபேவரை கிரிக்கெட்டர்கள் லிஸ்ட் இப்பொழுது மார்க் வாஹ், ஷேய்ன் வார்ன் அடுத்து டோனி என்பதில் நிற்கிறது. பின்னர் தான் பான்டிங் என்பது வரை. இது ஒரு சாதாரணமான மாற்றம் இல்லை. இதில் அடுத்த இந்தியர் என்றால் கோஹ்லி தான் ஆனால் பல பத்துகளுக்கு பின்னர். நான் என் பர்ஸனல் வாழ்க்கையில் பல விஷயங்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆஸ்திரேலிய அக்ரசிவ்னஸ் நான் எழுத்தில் கொண்டுவரும் ஒன்று இல்லை, என் பர்ஸனல் ஸ்டைலுமே அதுதான். இந்த சமயத்தில் என் வாழ்க்கையில் நடந்த ஒரு முக்கியமான மாற்றம் அமெரிக்கா வந்தது, நான் அங்கே வலிந்து திணித்துக் கொண்ட ஸ்டைல் தோனியுடையது.

பொய் இல்லை உண்மை. இங்கே உணர்ந்த விஷயம் தான் அற்புதமானது. ஆஸ்திரேலிய அக்ரசிவ்னஸ் சிறப்பானது எனக்கு பல வெற்றிகளைக் கொடுத்தது - பர்ஸனல் வாழ்க்கையில். ஆனால் சுலபமானது. தோனியுடைய ஸ்டைல் அசாதாரணமானது, நான் என் அமெரிக்க வாழ்க்கையில் செய்தே ஆகவேண்டிய(அப்படி நான் நினைத்த) விஷயம் தோனியாவது. இந்த மூன்றரை வருடங்களில் நான் உணர்ந்திருக்கிறேன் தோனியாவது சாதாரணமானதல்ல அல்மோஸ்ட் முடியவே முடியாததும். என் தோனி விரதம் மூன்று வருடங்களில் பல்லிளித்தது, என்னை வேலையில் இருந்து துரத்தும் அளவிற்கு. ஏனென்றால் நான் தோனி அல்ல என்பது முதல் விஷயம், நான் ஒரு ஆஸி என்பது இரண்டாவது. ப்ரைட் அன்ட் ப்ரிஜுடிஸ் எனக்குப் பிடித்துப் போனதற்கும் காரணம் டார்ஸி ஒரு அக்மார்க் ஆஸி. ஏன் எனக்கு ஆஸி டீமைப் பிடித்தது என்பதற்கு என்னிடம் ஆணித்தரமான காரணங்கள் உண்டு. ஆனால் இன்னும் விடாமல் பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என் பர்ஸனல் ஸ்டைல் என்பது ஆஸி ஸ்டைல் தான். இன்று தோனியின் ஸ்டைல் தான் சிறந்தது என்பதில் எனக்கு இரு வேறு கருத்துக்கள் இல்லை, ஆனால் என்னால் தோனி முகமூடியை அணிய முடிந்திருக்கவில்லை. இந்த மூன்றாண்டுகளில் என் இந்திய முகத்தை அறிந்தவர்கள் நம்பித்தான் போய்விட்டார்கள் நான் தோனியானதை. ஆனால் அது என் நடிப்பு திறமைக்குத்தான் சான்றாகும்.

இன்னதென்று சொல்ல முடியாத ஒரு மரியாதை எனக்கு இருக்கிறது தோனி மேல். என் ஆசிரியர்களில் ஒருவர், உச்சத்தில் வைத்திருக்கிறேன்.

ஆனால் என்னால் தோனியின் தோல்வியைக் கொண்டாட முடிகிறது, அது ஆஸி அணிக்கெதிராக மட்டும் தான். ஏனென்றால் க்ளோஸ் டு ஹார்ட் நான் இன்னமும் ஆஸி ஆள் தான், தோனியாக வேண்டி முயற்சி மட்டும் செய்கிறேன். எத்தனை விரைவில் தோனி ரிட்டையர் ஆவது என் ஆஸி நலனுக்கு நல்லது. :)

எனக்கு சூப்பர்ஸ்டீஷனே கிடையாது, என் மனது அதற்காக அலையும் ஒவ்வொரு பொழுது அடித்து நொறுக்கியிருக்கிறேன். ரொம்ப காஸ்ட்லியான ஒன்றாகக் கூட அது இருந்திருக்கிறது. சூப்பர்ஸ்டீஷன் இல்லாமல் கேம்ப்ளராக இருப்பது அசாத்தியமானது. ஜெயித்ததற்குப் பிறகு கூவுவது என் முறை அல்ல, எப்பொழுதும் டாமினேட்டிங் முறை தான் என்னுடையது. ஆனால் இந்த முறை என்னால் அப்படிச் செய்ய முடியாமல் போனது. ஜெயித்ததற்குப் பிறகு பெரும்பாலும் மௌனத்தில் ஆழ்ந்துவிடுவேன்.

"Revenge is a dish best served cold", இனி குறைந்தது இரண்டு வருடங்களாவது, நினைத்த நிமிடத்தில் தரையிலிருந்து இரண்டடி உயரத்தில் நடக்க முடியும். நம்புங்கள் நண்பர்களே நான்கு ஆண்டுகள் மனவலியுடன் வாழ்ந்திருக்கிறேன். ஆனால் கம்பேரிட்டிவ்லி ஆஸ்திரேலிய அணியால் இரண்டடி உயரமாக நடந்ததே அதிகம்.

Reply · Report Post