முருகன் என்றால் பெரிய இதுவா? @kryes


காஞ்சி பெரியவா சொன்னார் அதனால் அது உண்மை.. என்று ஒரு சாரர் நம்புகின்றனர்..

https://twitter.com/kryes/status/818493003019014145

முருகர் சொல்லிட்டார் அதனால் இது உண்மை என்று ஒரு சாரர் நம்புகின்றனர்..

இரண்டிற்கும் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப்போகிறது? இப்படி சிலரின் மனதில் கேள்விகள் எழலாம்.. எழவில்லை என்றால் எழுப்பிக்கொள்ளுங்கள்.
வித்தியாசம் இதுதான்
https://twitter.com/amas32/status/817615528126795776 எங்களுக்கு எதுவும் தெரியாது அவர் சொன்னார் அதை இங்கே பதிந்தேன்.. ஆக சான்று கேட்டாலும் தெரியாது சமஸ்கிருதமும் தெரியாது.. ஆனால் திருக்குறளில் சமஸ்கிருதம் கலந்து இருக்கிறது என்றதும் அத்தனை ஆர்வமாக பகிர்வதற்கு எங்கிருந்து வந்தது இந்த ஆர்வம்... ஏன் எதனால்? ஒரு வேளை.. பாருங்கள் எங்கள் மகா பெரியவர் இப்படி எல்லாம் தவறான தகவல் தருகிறார் என்று சுட்டிக்காட்டவா? இல்லையே! இவ்வளவு தான் உங்கள் தமிழ் என்ற எள்ளல் தொனி அல்லவா தொனிக்கிறது.

// அப்படியே முருகன்ட்ட போயி நீ எப்படி அவங்க சொன்னது தப்புன்னு சொல்றன்னு சான்று கேட்டோம்ன்னா... ந்தா படம் வரைஞ்சு பாகம் குறிச்சு வச்சு இருக்காரு http://madhavipanthal.blogspot.in/2017/01/Agaramudhala.html?m=1 :) இதையும் முழுசா அப்படியே நம்ப வேண்டிய அவசியம் இல்லை. இந்த தரவுகளை நீங்களும் சோதனைக்கு உள்ளாக்கலாம். // நான் முன்பே அவர் அளித்த தரவுகளை பொய் என்று சொல்லி அவர் முகத்தில் கரி பூசலாமே என்று தேடிப்போவேன்.. அனைத்தும் சரியாகவே இருந்து தொலைத்துவிடுகிறது.. ஆகவே இப்போதெல்லாம் சரிபார்ப்பதே கிடையாது.. கண்ண மூடிக்கிட்டு டிக் தான்.

முருகன் குறித்த விமர்சனங்கள் அவர் திட்டுவதற்கு கையாளும் கடுமையான மொழி பற்றியதாக இருக்கிறது. நமக்கெல்லாம் வரவேண்டிய கோபம் அவர் ஒருவருக்கு மட்டும் வரும்போது அக்கோபம் மிக மெல்லியதாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.. தவிர அவரே சொல்லியும் விட்டார் இங்கு யாராலும் எவராலும் எனக்கு எந்த காரியமும் ஆகப்போவதில்லை தேவையுமில்லை என்று. (Self Networking வேண்டி, தமிழை அடகு வைக்காதீர்கள்!) காதலியை மனைவியை தேவிடியா என்று யாரேனும் விளித்தால் கோபம் வரும் அல்லவா.? உன் தமிழ் பிறமொழி கலப்போடு கூடியது என்று சொல்லும்போது அவருக்கும் அப்படியே கோபம் வருகிறது எனக்கொள்கிறேன். தமிழை தாயாக எண்ணுகிறார் வெறும் பேச்சுக்காக இல்லாமல் உணர்வுப்பூர்வமாகவே... அவரின் கோபத்திற்கு நியாயம் கற்பிக்கவில்லை ஆனால் புரிந்துகொள்ள முடிகிறது.

நிறைமதி பெரும்புகழோடு நீடூழி வாழ்க முருகா



Reply · Report Post