kryes

KRS | கரச · @kryes

25th Jan 2017 from TwitLonger

போலீஸ் அராஜகம்! ஐ.நா சபையில் முறையிட வாருங்கள்! சல்லிக்கட்டுப் போராட்டம்!


தமிழ் மிகு வணக்கம், மக்களே!

இளைஞர் சல்லிக்கட்டுப் போராட்டம், மாபெரும் வெற்றியே!
கொண்டாட மட்டுமே முடியலை, அவ்ளோ தான்!:(

இளைஞர் போராட்டம் ஈட்டிய வெற்றிகள்:
1.சல்லிக்கட்டு மாநிலச் சட்டம்
2.போலீஸ் அராஜக ஆதாரங்கள்
3.பிரபலங்கள் மாயை விடுதலை
4.மக்கள், தங்கள் அரசியல் கட்சித் தனிச் சார்பு கடந்தமை
5.மக்கள்-இளைஞர் கூட்டணி

State Sponsored Attack = சிங்கள அரசு மட்டுமல்ல,
தமிழக அரசே தமிழர்களுக்குச் செய்யும்!
எ. ஆதாரத்துடன் நிரூபித்துக் காட்டிய இளைஞர் போராட்டம்!

நக்சல் ஆதரவாளர்கள், போராட்டத்தில் கலந்து விட்டார்கள் என்பதெல்லாம் அரசாங்க ஜோடிப்பு மாயை!
கலந்துட்டாங்க-ன்னே ஒரு பேச்சுக்கு வச்சிக்குவோம்; ஆனா அவங்க கலந்த போதும் வன்முறை வெடிக்கலையே?
அரசாங்கம் "கலைக்க" முற்பட்ட போது தானே வெடித்தது?

ஒரே கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டே இருங்கள்
****ஏன் கலைப்பு அவசரம்?****
****கலைக்க எந்த அராஜகமும் செய்வாயா அரசே?****

*போலீஸ் அராஜக ஆதாரங்கள் இருப்பினும்,
*சில இதழ்கள்/ கட்சிகள்/ கமல் முதலானோர் தட்டிக் கேட்டாலும்,
*நீதிமன்ற வழக்கு/ ஆணைய விசாரணை நடைபெற்றாலும்..
அரசாங்கம், தன் நிலை/ கொடுநிலை காக்கவே செய்யும்!

எனவே, இதை உலகப் பொதுப் பிரச்சனையாக்கி,
ஐ.நா மனித உரிமைக் குழுவில், நாம் அனைவரும் புகார் செய்தால்..
முழு நீதி கிடைக்கிறதோ இல்லையோ.. குறைந்த பட்சம், Blackmark விழும்!
உலக நிறுவன ஏட்டில், இந்த வன்கொடுமை அச்சேறி நிற்கும்! அரசு/ போலீஸ் அதிகாரிகளின் விசா, பயணங்கள் என்று அனைத்திலும் Blackmark ஏறும்!

இது குறித்து, New Yorkஇல் உள்ள ஐ.நா. அலுவலர்களிடமும் பேசினேன்!
அவர்களின் வழிகாட்டுதலே இது!

நான் தன்னார்வப் பணி செய்யும் UNICEF நிறுவன அலுவலர் வாயிலாக, இத் தொடர்பு கிட்டியது! முன்பு, ஈழப் போருக்குப் பின், என்னையும் என் குழுவையும் மட்டக்களப்பு முகாம் அனுப்பி வைத்தவர்களும் இவர்களே! தெளிந்த துணிவுடன் நம்பலாம்!

அதனால்.. நீங்கள் செய்ய வேண்டியது இதோ!
---------------

United Nations Human Rights Council
ஐ.நா. மனித உரிமை ஆணையம்

1. இதோ= http://goo.gl/Tm20VO புகார்ப் படிவம் & விதிகள்!

2. நீங்கள் நிரப்ப வசதியாக, ஒரு மாதிரிப் படிவம் செய்துள்ளேன்!
********* இதோ= http://goo.gl/5Ai9Yr

3. இந்த Documentஐ Download செய்து,
உங்கள் பெயர்/ மின்னஞ்சலை மட்டும் மாற்றி நிரப்புங்கள்!
இல்லத்து முகவரி/ கைப்பேசி எண் கட்டாயம் இல்லை! மின்னஞ்சலே போதுமானது!

4. உங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும்! படிவத்தில் அதை Tick செய்துள்ளேன்

5. அத்தனை வீடியோ ஆதாரச் சுட்டிகளையும் இணைத்துள்ளேன்!

6. சில இடங்களில், நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம்! கூடுதல் தகவல் சேர்க்கலாம்! ஆனால் உங்கள் தனிப்பட்ட கட்சிப் பிடிப்புகளை இதில் காட்டாமல் இருக்க வேண்டுகிறேன்! "வஞ்சிக்கப்பட்ட தமிழினம்" என்ற ஒரே அடையாளம் போதும்!

7. அனைத்தும் நிரப்பி, மேற்படி படிவத்தை attach செய்து, CP@ohchr.org என்ற ஐ.நா. சபை மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்!

ஆங்கிலத்தில் மட்டுமே Subject Line இடுங்கள்!
Complaint: Chennai India - Police Brutality on 1 million Peaceful Protestors for Jallikattu!
-----------

இயன்ற அளவு, பிற நண்பர்களுக்கும் இதைப் பரப்பித் தாருங்கள்!
நீங்கள் ஐ.நா. புகார் அனுப்பியவுடன், அனுப்பிவிட்டேன்! என்று இச் சுட்டியுடன், Twitterஇல் பரவல் செய்யுங்கள்!

நீங்கள் ஒவ்வொருவரும், போலீஸ் அராஜக லத்தியால் அடிவாங்கியதாகவே எண்ணி,
அதே உள்ளக் குமுறலுடன், தமிழுக்காக இதைச் செய்து தாருங்கள்! பத்தே நிமிடங்கள் தான்! உங்கள் பாதம் தொடுகிறேன்! நனி மிகு நன்றி!

அன்றறிவாம் என்னாது அறம்செய்க - மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை (குறள்)

இறைவன், உங்கள் குடும்பத்தையும் உங்களையும், இந்த அறச் செய்கைக்கு வாழ்த்தி அருளட்டும்!

Reply · Report Post