F5here

extremophile · @F5here

1st Jun 2017 from TwitLonger

2016 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது...


அதிபர் ட்ரம்ப் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமேரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளான்.

இது குறித்த சிறு விளக்கம்....

2015ல் புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு பாரிஸ் நகரத்தில் நடைபெற்றது. புவியை வெப்பமாக்கும் வாயுக்கள் வெளியேற்றத்தை குறைக்க ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டு, இந்த வாயுக்களை அதிகம் வெளியேற்றும் நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா, சீனா, இந்தியா உட்பட 195 நாடுகள் (சிரியா, நிகரகுவா தவிர்த்து) நீண்ட இழுபறிக்கு பிறகு ஐநாவின் வழிக்காட்டுதலின்படி 2016ல் கையெழுத்திட்டன.

பூமியை அழிவின் விளிம்பில் தள்ளியுள்ள, அதிகப்படியான இந்த Greenhouse gases வெளியேற்றத்தால் ஏற்படும் கடுமையான பாதிப்புகள் எண்ணிலடங்காதவை...

ஆனால் பல பத்தாண்டுகளாக சுழலியல் சார்ந்த எந்தப் பெரிய செயல்பாட்டையும் முன்னெடுக்க விடாமல் தடுப்பதற்குப் பின்னால் மிகப் பெரிய நிறுவனங்கள், நாடுகளின் அரசியல் அடங்கியுள்ளது.

எளிமையாக சொல்வதானால், சுற்றுச்சூழலை காப்பது தொடர்பான நடவடிக்கைகளால் படிம எண்ணெய், நிலக்கரி, இயற்கை எரிவாயு வியாபாரம் செய்யும் நாடுகள், பெரு நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படும் என்பதால் பல்வேறு வகைகளில் இதை அவர்கள் எதிர்க்கின்றனர்.

அதில் சில,

சூழலியல் சார்ந்த விவர அறிக்கைகளை வெளி வர விடாமல் தடுப்பது, அதுக்குறித்த சந்தேகங்களை எழுப்புவது...

சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களை கொலை செய்வது, விஞ்ஞானிகளை மிரட்டுவது...

எதிர் பிரச்சாரம் (propganda) செய்வது (அதாவது புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் போன்றவையெல்லாம் அதீத கற்பனை என்று மக்களை நம்ப வைப்பது)

7-8 ஆண்டுகளுக்கு முன் தமிழிலும் இது மாதிரியான ஒரு புத்தகம் படித்த நியாபகம், அதாவது கடல் மட்டம் உயர்வதால் பிரச்சனை எதுவும் இல்லையென்றும், அதற்க்கு ஈடாக பூமியின் நிலப்பரப்பு உயர்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது... விகடன் வெளியீடு ;) (திரும்ப படிக்க தேடிட்டுயிருக்கேன்)

மேலும் அரசியல்வாதிகளையும், சமூகத்தில் செல்வாக்கு வாய்ந்தவர்களையும் கூட்டு சேர்த்துக்கொள்வது (அமெரிக்காவில் இந்த எதிர் பிரச்சார கும்பலின் பெயர் "climate skeptics"). ட்ரம்பின் குடியரசுக் கட்சிப் பிரமுகர்கள் இதில் உள்ளனர். அந்நாட்டில் பொதுவாகவே பெரு நிறுவனங்களின் நலன் சார்ந்தே அரசு இயங்கும் என்பது நாம் அறிந்ததே... (please google this term "climate change/global warming skepticism" and learn further...)

இதற்கெல்லாம் சவூதி உட்பட பணக்கார அரேபிய நாடுகளும் கோடிக்கணக்கான பணத்தை வாரியிறைத்துள்ளன.

இதையெல்லாம் மீறி ஒபாமா ஆட்சியில் கையெழுத்தான இந்த பாரிஸ் ஒப்பந்தம் நிறைவேறினால் அமெரிக்க நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனவும், இந்த புவி வெப்பமயமாதல் என்பதே அமெரிக்க நிறுவனங்களை போட்டியில் முந்த, சீனா செய்யும் பொய் பிரச்சாரம் என்றும் சொல்லி, ஒப்பந்தத்தை விட்டு விலகுவதை அதிபர் தேர்தல் வாக்குறுதியாகவே ட்ரம்ப் முன் வைத்தான்.

ட்ரம்ப் பதவியேற்றவுடன் அமெரிக்க அரசின் (EPA) சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறைக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுவிட்டது. சூழலியல் சார்ந்த ஆராய்ச்சி விவர அறிக்கைகள் வெளியிட பல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

G7, இன்னபிற நாடுகள், அறிவியலாளர்கள், பிரபலங்கள் பலரும் ஒப்பந்தத்தை புறக்கணிக்க வேண்டாமென ட்ரம்பிடம் மன்றாடியும், சீனா மற்றும் இந்தியாவிற்கே இந்த ஒப்பந்தந்தால் லாபம் என்றும், இதை நடைமுறைப்படுத்தினால் இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் எனவும் கூறியுள்ளான். இதில் சம்பந்தப்பட்டுள்ள அடுத்த இரு முக்கிய நாடுகளான சீனாவும், இந்தியாவும், அமெரிக்கா விலகினாலும் தாங்கள் இந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்து செல்லவுள்ளதாக அறிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி, ஒப்பந்தத்தை செயல்படுத்த உறுதி பூண்டுள்ளன.

சூரிய ஒளி மின்சாரம், பெட்ரோல் டீசல் பயன்பாட்டை குறைப்பது, சுற்றுசுழலை பாதிக்கும் தொழிற்சாலைகளை நெறிப்படுத்துதல் போன்ற மாற்று திட்டங்களை இந்தியாவும், சீனாவும் செயல்படுத்திக்கொண்டிருக்கும் நிலையில் ட்ரம்பின் அமெரிக்காவில் நிலக்கரி சுரங்கங்கள் திறக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.

அதாவது அமெரிக்கா வழக்கம் போல் சுற்றுச்சூழலை மாசுப்படுத்திக்கொண்டிருக்க மற்ற நாடுகள் பெரும் பொருட்செலவில் மாற்றுத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

இந்த ஒப்பந்தமே காலம் கடந்த நடவடிக்கை என்ற சூழலியலாளர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்காவை காரணம் காட்டி மற்ற நாடுகளும் ஒப்பந்தத்தை மீற முற்படலாம்.

ட்ரம்ப் விலகினாலும், தாங்கள் பாரிஸ் ஒப்பந்த விதிகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவோம் என்று அமெரிக்க மாநிலங்கள் சில அறிவித்துள்ளன.

சொந்த நாட்டிற்கே வில்லனாக ட்ரம்ப் செயல்பட்டுக் கொண்டிருப்பது அமெரிக்காவின் பிரச்சனை, ஆனால் எல்லா உலக நாடுகளும் சேர்ந்து செயல்படுத்தவேண்டிய "பாரிஸ் ஒப்பந்த” விவகாரத்தில் ட்ரம்பின் இம்முடிவு ஏற்படுத்தப் போகும் பாதிப்புகளுக்கு நாம் எல்லோருமே பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்.

Reply · Report Post