பாசிச பாஜக விற்கு அடியாள் வேலை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்!


பாசிச பாஜக விற்கு அடியாள் வேலை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின்!

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் முதன்முதலில் கொரோனா ஊரடங்கை அறிவித்து பாசிச பாஜக, அதன் அடிமை அதிமுக விற்கு எதிரான மக்கள் திரள் போராட்டங்களைத் தடுத்து நிறுத்தியது யார் தெரியுமா?

வேறு யாருமல்ல!
ஆரிய பாஜக வின் பரம்பரை அடிமையான திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் தான்!

மார்ச்சு 22 அன்று மோடியால் ஊரடங்கு அறிவிக்கப்படும் சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்று வந்த CAA எதிர்ப்புப் போராட்டங்களை கொரோனாவைக் காரணம் காட்டி தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொண்டவர் தான் திமுக தலைவர் ஸ்டாலின்!

அதன் பிறகு கொரோனாத் தொற்று தீவிரமாக இருந்த நிலையில், கடுமையான ஊரடங்கு அமலில் இருந்ததையும் மதிக்காது தேர்தல் கால ஏற்பாடாக 'ஒன்றிணைவோம் வா' எனும் பெயரில் விளம்பர அரசியலுக்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் கிற்கு கோடிக்கணக்கில் பணம் செலவழித்து தமிழ்நாடு முழுக்க திமுக ஏற்பாடு செய்த கூட்டங்களில் பரவாத கொரோனா, திமுக நடத்திய பிரச்சார பொதுக் கூட்டங்களுக்கு, கிராம சபை நாடகங்களுக்குப் பணம் கொடுத்து பெருமளவில் மக்களை அழைத்து வந்து கூடிய இடங்களில் பரவாத அந்தக் கொரோனாதான், அதன் பாதிப்பு பெரிய அளவில் உணரப்படாத, அரசால் ஊரட‌ங்கே அறிவிக்கப்படாத CAA போராட்டங்கள் நடைப்பெற்று வந்த அந்தக் காலக்கட்டத்தில், மக்கள் இப்படி கூடி அரசுக்கு எதிராக போராட்டம் செய்தால் கொரோனா பரவிவிடுமென்று மக்களை அச்சுறுத்தி பாஜக அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தடுத்து நிறுத்த கடும் முயற்சி செய்தவர் தான் இந்த ஸ்டாலின்.

டெல்லி ஷாகின்பாக்கில் CAA க்கு எதிராக நடைபெற்று வந்த தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக 'சென்னை ஷாகின்பாக்' என்னும் பெயரில் சென்னை வண்ணாரப் பேட்டையிலும், மண்ணடியிலும் இசுலாமிய அமைப்புகளின் தொடர் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது.

பாஜக, அதிமுக அரசுகள் பலகட்ட பேச்சுவார்த்தை, கொரோனாவை வைத்து அச்சுறுத்தல், காவலர்களை வைத்து தடியடி, அடக்குமுறை என எவ்வளவோ முயன்றும் அந்தப் போராட்டங்களை முறியடிக்க இயலாத சூழ்நிலையில் இறுதியாக பாஜக, திமுக கூட்டுச் சதியின் அடிப்டையில் மயிலாப்பூர் குருமூர்த்தி குழுவால் திட்டமிட்டு களமிறங்கப்பட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்!

CAA எதிர்ப்பு போராட்டங்களில் திமுக வும், அதன் தலைவர் ஸ்டாலினும் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில் இறுதியாக சிறுபான்மையினரின் பாதுகாவலன், இசுலாமியர்களின் நண்பன் எனும் பசப்பு வார்த்தைகளோடு மார்ச் 11 ல் மண்ணடி மற்றும் மார்ச் 17 ல் வண்ணாரப்பேட்டை போராட்டக் களங்களுக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் இசுலாமியரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்கு மாறாக கொரோனாவைக் காரணம் காட்டி போராட்டத்தைக் கைவிடுமாறு இசுலாமியர்களிடம் கெஞ்சிக் கூத்தாடினார்!

CAA எதிர்ப்பு போராட்டைத் கைவிடுமாறு பாஜகவிற்கு ஆதரவாக அவர் விடுத்த அறைகூவல்களை கிஞ்சித்தும் மதிக்காத இசுலாமியப் பெருமக்கள் அந்தந்த மேடைகளிலேயே ஸ்டாலின் முகத்திற்கு நேராகவே அவரது போராட்ட நிறுத்தக் கோரிக்கையை நிராகரித்து அசிங்கப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்!

அதன் பிறகு ஒரு சில நாட்களிலேயே திரை மறைவு வேளைகளில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், இசுலாமிய அமைப்புகளைச் சார்ந்தவர்களிடம் பேசி அவர்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கையாண்டு தொடர்ந்து நடந்து வந்த அவர்களது போராட்டங்களை நீர்த்துப் போகச்செய்தார்; ஒரு வழியாய் பாஜக அரசுக்கு ஆதரவாக அந்தப் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு வந்து, அது மேலும் பரவாமல் தடுத்தி நிறுத்தி தமிழ்நாட்டில் பாஜக, அதிமுக அரசுக்கு ஏற்படவிருந்த நெருக்கடி நிலையிலிருந்து அவர்களைக் காப்பாற்றி மயிலாப்பூர் குருமூர்த்தி அணியால் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியை அவர்களின் மனம் மகிழும் வண்ணம் செவ்வனே செய்து முடித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்!

ஆம்.. அவர்தான் இந்த திமுக தலைவர் ஸ்டாலின்..
ஆரியத்துவ பாஜக வின் பரம்பரை அடிமை..

(ஆதாரங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

Reply · Report Post