poonaiyar

· @poonaiyar

11th Apr 2015 from TweetCaster

படித்தால் பிடிக்கும் -இல்லையேல் பைத்தியம் பிடிக்கும்.
சரி,சரி...
வாங்க நேரா...விஷயத்திற்கு போவோம்...
என் வீட்டருகே....சுமார் 40-45வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தினமும் மருத்துவமனைக்கு சென்றுகொண்டே இருக்கிறார்....(இன்றும்)
ஒருநாள் நான்.... "சாரும் நீங்களும் தினமும் வெளியே ஜாலியா போய்ட்டுவர்றீங்க போல"..? ம்...இப்படிதான் இருக்கனும் என்றேன்....;-)
அதைக்கேட்டு அந்த அக்கா...அட ஏன் சார் நீங்க வேற? நாங்க ஜாலியாவா போறோம்...ஒருநாள் எங்க கூட வந்து பாருங்கள் தெரியும் என்றார்...
என்ன சொல்றீங்க விரிவா சொல்லுங்க என்றேன்...
ஆமா சார் ஒருநாளைக்கு ₹200 செலவு செய்யறோம் இன்று,நேற்றல்ல...
திருமணம் ஆன முதல் மாதத்தில் Nerve Compression என்று சொல்லக்கூடிய நரம்புவாதம் பிறகு இதுவரை 3 முறை ஆப்ரேசன்கள்...அதில் உள் உறுப்புக்களான கர்ப்பப்பை,ஒட்டுக்குடல், என அனைத்தும் வெட்டி வெளியே எறிந்தாயிற்று...
சரி அதுதான் எல்லாம் முடிந்ததே இன்னும் ஏன் தினமும் ஹாஸ்பிடல் போகனும்னு நீங்க நினைக்கறமாதிரி நான் கேட்டே விட்டேன்...
அதற்கு அவர் சொன்னது...
"நெஞ்சை தூக்கிவாரிப்போட்டது"
25வருடங்களுக்கு முன் வந்த நோயிலிருந்து....இன்று வந்துள்ள நோய்வரை....""யார் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வாராம்""...!
உதரணமாக அவருக்கு தலைவலி என்றால் அவரின் மாமியார் வெற்றிலையைக் கிள்ளி நெற்றியில் பத்து போடசொல்வார்களாம் இவரும் போட்டுக்கொள்வாராம்....அப்படியே அவரின் அம்மாவிற்கு போன் செய்து தலைவலி மேட்டரைச் சொல்வாராம் உடனே அவர் ஏதோ balm போடச் சொல்வாராம் அதையும் போடுவாராம்..மும்பையிலிருந்து(தலைவலிக்கு நெட்டில் தேடிவிட்டு) பையன் போன் செய்து ஒரு மருந்து சொல்வாராம் அதையும் உடனே செய்வாராம்..இன்னும் எதிர்வீட்டு ஏகாம்பரி,பக்கத்துவீட்டு பரமேஸ்வரினு லிஸ்ட் நீண்டு கொண்டே போகும் போல...;-((
இதைவிட முத்தாய்ப்பாக ஒருவிஷயம் என்னன்னா? நீங்களும் ஏதாவது ஒரு டாக்டரை சிபாரிசு பண்ணுங்களேன்னு என்னைப் பார்த்து அப்பாவியாய் அவர் கேட்கும்போது....;((
ஆக காலம் முழுவதும் மருந்தில்லாமல் வாழ முடியாத நிலைக்கு வரக்காரணம்...""நாமேதான்""
இங்கு நாம் கவனிக்கவேண்டியது...
*எனக்கு வந்த வலி/நோய் உடனே தீரவேண்டுமென நினைப்பது.
*அதற்காக எதையும் செய்யத் துணிவது...
*யார் எதைச் சொன்னாலும் செய்வது.
இவைகள் ஒரு சிறு நோயை மிகப்பெரிய நோயாக்க நாமே வழிசெய்வதாகும்.
ஒருவரின் உடல்நிலையை சோதித்து மருத்துவர் மருந்து தருகிறார்...அந்தநோய் குணம் ஆனவுடன் அந்த நபர் அந்த மருந்தின் பெயரை தனது உற்றார்களுக்கு சிபாரிசு செய்கிறார்..அவருக்கு கொடுக்கப்பட்ட வீரியம் எவருக்கும் சேருமா என்று சொல்பவரும் யோசிக்கவில்லை கேட்பவரும் யோசிப்பதாய் இல்லை ;((
அன்பு நண்பர்களே உங்களுக்கு உடல்நலனில் குறைவந்தால் பொறுமையாக அருகிலிருக்கும் மருத்துவரை அணுகி முழுவிபரங்களையும் தெளிவாக சொல்லி அவர் தரும் மருந்துகளை அவர் சொல்லியது போல சாப்பிடுங்கள்...[குப்பனும்,சுப்பனும் ஐடியாவும் தருவார்கள்...நாளைக்கு நம்மைப்பார்க்க ICU விற்கும் பண்கட்டுகளுடன் வருவார்கள்]
நோயிலிருந்து தள்ளி நிற்க... நீங்கள் செய்யவேண்டியது
*யோகா செய்யுங்கள் அல்லது...
*தினமும் குறைந்தது 40நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள்
*தினமும் குறைந்தது 3லிட்டர் தண்ணீர் குடியுங்கள்.
*கண்டிப்பாக 8மணிநேரம் உறங்குங்கள்
*பாஸ்ட் புட்களுக்கு விடைகொடுத்து காய்கறிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
நல்ல பழக்கங்களை பேணுவோம்...!
நோயற்ற வாழ்வு வாழ்ந்து நோய்களை ஓட,ஓட விரட்டிக்காட்டுவோம்....!!
என்றும் அன்புடன்..
உங்கள் ""பூனையார்""
_/|\_



Reply · Report Post